நல்ல எச்சரிக்கை!பனிக்கட்டியில் ஹோட்டலா... அதுவும் குளிர்காலத்தில் மட்டுமே திறந்திருக்குமா..? கேட்கவே மனசெல்லாம் உறைகிறது.
- கீதா, கோவில்பட்டி; மனோகரன், கோவை; கதிரவன், மதுரை; இலக்சித், மடிப்பாக்கம்.

வீட்டுச் சமையலும் கொதிக்க வைத்த குடிநீரும் கரோனோவில் இருந்து நம்மைக் காக்கும் என அறிந்தோம். கரோனா வைரஸ் பற்றிய எச்சரிக்கை பயனுள்ள பாதுகாப்புத் தொகுப்பாக உதவியது.
- இராம.கண்ணன்,திருநெல்வேலி; பிரேமா குரு, சென்னை; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்; சங்கீத சரவணன்,
மயிலாடுதுறை.

நியூஸ் சாண்ட்விச்சில் ‘6 நாட்களில் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை’, ‘விமான நிலையத்தில் திரையரங்கம்’, ‘பழ வியாபாரிக்கு பத்ம விருது’ என வியக்க வைக்கும் செய்திகளைப் போட்டுத் தாக்கிட்டீங்களே.
- பிரேமா குரு, சென்னை; முரளி, நங்கநல்லூர்; ஜெய ராமன், கோவிலம்பாக்கம்; சரண் சுதாகர், வேளச்சேரி.

இந்த ஆண்டு மட்டும் உலகளவில் 19 கோடிப்பேர் வேலையின்றி தவிக்கப்போகிறார்கள் என்ற ஆய்வறிக்கை அடிவயிற்றைக் கலக்கு கிறது. மத்திய, மாநில அரசுகள் உடனே சரியான தீர்வைக் கண்டாக வேண்டும்.
- மனோகர், மேட்டுப்பாளையம்; பிரேமா ராஜ்குமார், குன்னூர்;  வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; முகம்மது உஸ்மான், மூலக்கடை.

கலை எந்த மதத்திற்கும் சொந்தமில்லை என்பதை ஜாகிர் உசேன் தன் பரத நாட்டியத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்.
- பிரேமா ராஜ்குமார், குன்னூர்; ராஜம் தம்பையா, மாம்பலம்; ஜெயசந்திரபாபு, மடிப்பாக்கம்; சங்கரன், பழவந்தாங்கல்.  

பவளப்பாறை ஓவியங்கள் எதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக 45 வயதில் நீச்சல் பழகி, பின்பு பவளப்பாறைகளை நேரில் பார்த்து வரைந்து சாதித்த உமா அவர்கள் ஒரு சாதனைப் பெண்மணி.
- ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; ஏஞ்சலின், சென்னை; தா.சைமன் தேவா, விநாயகபுரம்; வேல், உள்ளகரம்; மியாவ்சின், கே.கே.நகர்.

ஒரு காலத்தில் குரங்குகளின் கூடாரமாக இருந்த தாய்வானின் ஹவ்டோங் கிராமம் இன்று பூனைகளின் தேசமாக மாறி
வரும் சூழலை வெளிப்படுத்தியிருந்த தகவல் ரசனை.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; கலிவரதன், கீழ்க்கட்டளை; ஆசிகா, வியாசர்பாடி; கவுரிநாத், பரங்கிமலை.

தமிழ் சினிமாவின் க்ளிஷே வசனங்களைப் படிக்கப் படிக்க சிரிப்புதான் வந்தது. இது திரையுலகின் சாபம்தான்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; நிலவழகு, நீலாங்கரை; கோவிந்தராஜ், தில்லை கங்கா நகர்; சந்திரமதி, சென்னை.

ரீடர்ஸ் வாய்ஸ்