20 லட்சம் பேரைக் கவர்ந்த குகை!



எறும்பு ஊர்ந்து ஊர்ந்து ஒரு பாதை உருவானால் எப்படியிருக்கும்?
அப்படியான ஒரு சம்பவம்தான் இது. தென் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய ஏரி கரேரா. சிலி நாட்டில் வீற்றிருக்கும் இந்த ஏரி அதிகபட்சமாக 586 மீட்டர் ஆழமுடையது. குளிர்காலத்தில் அப்படியே உறைந்துவிடும். தவிர, ஏரியில் உள்ள நீர் அதிகளவு மினரல் சத்தைக் கொண்டது.

ஏரியின் மையத்தில் இருக்கும் அழகான மார்பிள் குன்றுதான் இதன் ஸ்பெஷல். 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அந்தக் குன்றின் மீது ஏரித் தண்ணீர் பாய்ந்து அதில் அழகழகான மார்பிள் குகைகள் உருவாகியுள்ளன.

அத்துடன் குன்றின் வண்ணமும் மாறி ஓவியம் போல காட்சியளிக்கிறது.
இந்த மார்பிள் குகைகளுக்குள் விசிட் அடிக்க படகில் மட்டுமே செல்ல முடியும்!கடந்த வருடம் 20 லட்சம் பேர் மார்பிள் குகையைக் கண்டு களித்துள்ளனர்.