Data Corner



*கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017 - 18ல் நாட்டில் வேலையின்மை 6.1% ஆக உயர்ந்துள்ளது.

*தமிழகத்தில் 2001 முதல் 2017 வரை காதல் விவகாரங்களுக்காக 240 கொலைகள் நடந்துள்ளன. 395 பேருடன் முதலிடத்தில் உள்ள உத்தரப் பிரதேசத்தை அடுத்து தமிழகம், கர்நாடகா, தில்லி ஆகிய மாநிலங்களில் நடந்திருக்கும் கொலைகளுக்கான இரண்டாவது பெரிய காரணம் காதல் விவகாரம்தான்!  

*அகில இந்திய கேமிங் ஃபெடரேஷன் வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி, ‘ஆன்லைன் ரம்மி மூலமாக 2014ம் ஆண்டு ரூ.60 லட்சம் வணிகம் நடைபெற்றது. இந்தத் தொகை 2018ல் ரூ.2 கோடியாக உயர்ந்துள்ளது.  

*2011 - 12ல் 7.4% ஆக இருந்த நிகர நிதிச்சேமிப்புகளின் பங்கு 2017 - 18ல் 6.6% ஆக குறைந்துள்ளது.

*ஒரு நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் எத்தனை பேர் வேலையில் இருக்கின்றனர் அல்லது வேலை தேடிக்கொண்டிருக்கின்றனர் என்பதை Labour Force Participation Rate (LFPR) என்பார்கள். 2011 - 12ல் 56% ஆக இருந்த LFPR, 2017 - 18ல் 49.8% ஆக இந்தியாவில் குறைந்துள்ளது.

*பப்ஜி, ஃப்ரீ ஃபயர் உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆண்டுதோறும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருவதால் 2023ல் ரூ.11,300 கோடிக்கு வணிகம் நடைபெறும் என கணிக்கிட்டுள்ளனர். 2010ம் ஆண்டு 3 கோடிப் பேர் ஆன்லைனில் விளையாடினர். இந்த எண்ணிக்கை 2018ல் 30 கோடிப் பேர் ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 15% பெண்கள்.

அன்னம் அரசு