COFFEE TABLE



ஆட்டோகிராப்

பாலிவுட்டில் அஜய்தேவ்கன், சஞ்சய்தத் காம்போவில் ரெடியாகும் படத்தில் பரபரக்கிறார் சோனாக்‌ஷி சின்ஹா. ஆட்டோகிராபில் ‘love’ என்று எழுதி கையெழுத்திடும் சோனாக்‌ஷி, ‘‘கடினமாக உழைத்தால் மட்டுமே உங்கள் கையெழுத்து ஒருநாள் ஆட்டோகிராப் ஆக மாறும்...’’ என்கிறார் ஃப்ரெஷ் சிரிப்பில். இதை சோஷியல் மீடியாவிலும் சொல்லி ஹார்ட்டின்களை அள்ளுகிறார்.

நண்பேன்டா

‘அழகு’, ‘சூப்பர்’, ‘நம்ப முடியவில்லை’ என்று கமெண்டுகளும் ஹார்ட்டின்களும் வரிசை கட்டுகின்றன. இத்தனைக்கும் வெறும் 16 நொடிகள் மட்டுமே ஓடும் வீடியோ க்ளிப் அது. ஆனால், அந்த 16 நொடிகளில் அழகான ஒரு நட்பைச் சொல்கிறது அந்தப் பதிவு. காண்டாமிருகமும் ஆடும்தான் அந்த நண்பர்கள். காண்டாமிருகம் ஜாலியாக ஆட்டுடன் விளையாடும் இந்த வீடியோதான் இப்போது டுவிட்டரில் வைரல்.

ஆப்தேவுக்கு கட்

இன்ஸ்டாவில் ‘ஆப்தே’வை கட் செய்துவிட்டு ராதிகா என்று பெயரை சுருக்கிவிட்டார் ராதிகா ஆப்தே!படப்பிடிப்பின் போது கிடைக்கும் இடைவெளியில் ஆங்கிலப் புத்தகங்களை வாசிப்பது அவரின் ஹாபி. சமீபத்தில் அப்படி ஒரு மொமன்ட்டை க்ளிக்கி, இன்ஸ்டாவில் தட்டிவிட்டு லைக்குகளை குவித்துள்ளார். ‘‘Books are the Best Gift...’’ என்கிறார் சில்லென்று!

ஜிம்முக்கு போனா சாப்பிட முடியாதா..?

‘‘பாடி பில்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக எந்த நேரமும் ஜிம்மிலேயே இருப்பவர்கள் உணவு விஷயத்தில் கோட்டை விடுகின்றனர். உணவு எடுத்துக் கொள்வதில் ஜிம்மிற்கு போகாதவர்களை விட பின்தங்கியுள்ளனர்...’’ என்கிறது மருத்துவம் சம்பந்தமான பத்திரிகையின் ஆய்வு. ‘‘பிட்னஸ் மட்டுமே என்று இருப்பவர்களால் உடல் ஆரோக்கியத்திலும் சமூகத்துடனான உறவிலும் நாட்டம் கொள்ள முடிவதில்லை. தவிர, அதிகப்படியான உடற்பயிற்சி உணவின் மீதான ஆர்வத்தை சிதைக்கிறது...’’ என்கிறது அதே ஆய்வு. 25 வயதுக்குட்பட்ட 2000 பேரிடம் ஆய்வு செய்து இத்தகவலைத் திரட்டியுள்ளனர்.

ஒயர்லெஸ் மவுஸ்

பாக்கெட்டில் வைத்து எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லக்கூடிய வகையில் ‘ஷியோமி’ நிறுவனம் ஒயர்லெஸ் மவுஸை அறிமுகப்படுத்தியுள்ளது.
மலிவான விலை மற்றும் ஸ்லிம்மான வடிவமைப்பு வாங்க வேண்டும் என்று ஆவலைத் தூண்டுகிறது. ஒரு வருட காலம் பேட்டரி நிற்கும் என்று உத்தரவாதம் அளிக்கிறது ஷியோமி. விலை ரூ.500.

குங்குமம் டீம்