99 வயது வரை நோய் இருப்பதே தெரியாமல் வாழ்ந்தவர்!அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் ரோஸ் மேரி பென்ட்லி. இறந்த பிறகு உடலைத் தானமாக மருத்துவத்துறைக்கு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதன்படி ஓரிகான் மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒப்பந்தமும் செய்திருந்தார்.

99வது வயதில் ரோஸ் மேரி மரணமடைய, அவரின் இறந்த உடல் அந்த மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டது.ரோஸ் மேரியின் உடலை சோதித்துக் கொண்டிருந்த மருத்துவ மாணவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்; அவருக்கு ‘Situs Inversus with Levocardia’ என்ற பிரச்னை இருந்திருக்கிறது.

ஐந்து கோடிப் பேர்களில் ஒருவருக்குத்தான் இந்தப் பிரச்சனை வரும். அதாவது இதயம் மட்டுமே சரியான இடத்தில் இருக்கும்!கல்லீரல், கணையம் போன்ற மற்ற உடல் உறுப்புகள் எல்லாம் வழக்கத்துக்கு மாறாக உடலின் இடது பக்கத்தில் இருக்கும்!

இந்தச் சூழலிலும் ரோஸ் மேரி 99 வயது வரைக்கும் உயிர் வாழ்ந்திருக்கிறார். தவிர, உடல் உறுப்புகள் இடம் மாறியிருந்த விஷயம் அவர் இறந்த பிறகுதான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது!

த.சக்திவேல்