இதயத்தைக் காப்போம்‘லைட்டா நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு, ஒருவேளை ஹார்ட் அட்டாக்காக இருக்குமோ?’... இப்படி முப்பது வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் முன்பெல்லாம் சொன்னால் நிச்சயம் சிரிப்பு வரும். ஆனால் இப்போதோ நிலை அப்படியே தலைகீழ். எந்த வயதினர் நெஞ்சுவலி என்றாலும் எதற்கும் ஒருமுறை மருத்துவரிடம் பார்த்துவிடுங்கள் என்னும் பதிலே வருகிறது. இவ்வளவு குறைந்த வயதினருக்கும் இதயக் கோளாறுகள், நெஞ்சுவலி பிரச்னைகள் வருவதற்கு காரணம் என்ன?

சொல்கிறார் Dr பிரதீப் நாயர் (Senior Consultant Interventional Cardiology, Fortis Malar Hospitals, Chennai) ‘பெரும்பாலும் நம்முடைய வாழ்க்கை மாற்றம், அவசரம், முறையற்ற உணவு என நிறைய சொல்லலாம். இதய அடைப்பு இரண்டு பிரச்னைகளால் ஏற்படும், ஒன்று ஜெனிடிக் அல்லது வயதான பிரச்னை.

இந்த வகை பெரும்பாலும் ஐம்பது வயதுக்கு மேல் ஏற்படும். மற்றொரு வகை நெஞ்சுவலிதான் இளைஞர்களை குறிவைக்கும் சமீபத்திய பிரச்னை.கடந்த நான்கைந்து வருடங்களாக இந்த இளைஞர்களை தாக்கும் நெஞ்சுவலி அதிகரித்து வருகிறது. மனஉளைச்சல், தூக்கமின்மை, அதிக அளவில் வெளிப்புற உணவும், அதீத மசாலா எண்ணை கொழுப்பு நிறைந்த உணவுகள் உண்பது, மன அழுத்தம், வேலைப்பளு, புகைபிடித்தல் என்பன போன்ற முறையற்ற வாழ்க்கைமுறைகளே இதற்கு காரணமாக இருக்கின்றன.

இதற்கு ஒரே வழி குறைந்தபட்சம் தினமும் நடை, எளிமையான உடற்பயிற்சி, வெளிப்புற ஆகாரங்களை தவிர்ப்பது, குறிப்பிட்ட நேரமேனும் தூக்கத்திற்கு இடமளித்து ஓய்வெடுப்பது, அவ்வப்போது மனதை அமைதிப்படுத்தும் யோகா, சின்ன பயணங்கள்மேற்கொள்வது போன்றவற்றால் ஆரம்ப நிலையிலேயே தடுக்கலாம். மேலும் அதிக குடிப்பழக்கம், புகைபிடிப்பதையேனும் தவிர்ப்பது நல்லது.

முப்பது வயதைத் தொட்டாலே வருடத்திற்கு ஒருமுறை முழுமையான மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுங்கள். மேலும் உடற்பயிற்சி செய்தாலோ, ஓடினாலோ வரும் இதயப் படபடப்பு, நெஞ்சடைப்பு ஆகாது. சிலருக்கு முதுகுவலி, அல்லது அல்சர் வலி கூட மாரடைப்பு போன்றே இருக்கும். இதற்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

நெஞ்சுவலி, மயக்கம், இடதுபக்கம் முழுக்க வலி, வியர்வை, வாந்தி என அனைத்தும் சேர்ந்து வரும்போதுதான் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும் இதில் நிறைய வகைகள் உள்ளன. நீங்களாகவே முடிவுக்கு வராமல் தகுந்த முறையில் சிகிச்சை பெற்று தெளிவதும் நல்லது. இதயம் சார்ந்த எந்தப் பிரச்னைக்கும் தகுந்த சிகிச்சை மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பரிசோதனைகள் அனைத்தும் நமது ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையிலேயே சிறந்த முறையில் செய்துகொள்ளலாம்.

Dr Pradeep G Nayar, MD,
DNB(Card), MNAMS, FRCP(Edin), FRCP(Glas), FAHA, FACC, FSCAI, FIAMS, FIMSA
Senior Consultant
Interventional Cardiology
Fortis Malar Hospitals,
Adyar, Chennai.
For Appointments : 9962599933
Email :
contactus.malar@fortishealthcare.com