நிலவும் சுருங்கும்!முதுமையின் காரணமாக மனிதனின் தோல் பகுதி சுருங்குவதை பார்த்திருப்போம். நமக்கும் அந்த அனுபவம் கிடைக்கும். மனிதனைப் போல நிலாவும் சுருங்குமா? ஆம்... என்கிறது ‘நாசா’வின் சமீபத்திய ஆய்வு. ஆனால், நிலவு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சுருங்கி வருகிறதாம். கடந்த ஆயிரம் கோடி ஆண்டுகளில் 50 மீட்டர் அளவுக்கே நிலவு சுருங்கியிருக்கிறது. இப்படி நிலவு சுருங்குவதால் அதன் மேற்பரப்பில் மட்டும் சுருக்கம் விழுகிறது.

‘‘எப்படி திராட்சையின் மேற்பகுதி சுருங்கி உலர் திராட்சையாக மாறுகிறதோ அதே மாதிரி நிலவும் சுருங்குகிறது...’’ என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
நிலவின் மையப்பகுதியின் வெப்ப நிலை குறைந்து அது குளிர்மையடைவதுதான் நிலா சுருங்குவதற்கு முக்கிய காரணம். இதனால் அதன் மேற்பரப்பில் விரிசல்கள் விழுகின்றன. தவிர, நடுக்கம் கூட ஏற்படுகிறது. இதனை ‘நிலா’ நடுக்கம் என்கின்றனர். இதனால் பூமிக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ என்ற கோணத்தில் ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

த.சக்திவேல்