12 மணி நேரத்தில் 35 கோடி மரங்கள்!இன்று உலகின் முன் நிற்கும் முக்கிய பிரச்னை பருவநிலை மாற்றம். இதைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தைகள் முதல் சூழல் போராளிகள் வரை தினந்தோறும் போராட்டங்களை அரங்கேற்றுகின்றனர். அந்த வகையில் எத்தியோப்பியாவின் நடவடிக்கை உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.ஆம்; 12 மணி நேரத்தில் நாடு முழுவதும் 35 கோடி மரங்களை நட்டு சாதனை படைத்திருக்கிறது எத்தியோப்பியா.

தன்னார்வலர்கள், ஐநா சபையைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என எல்லோரும் சேர்ந்து ஆயிரக்கணக்கான இடங்களில் மரங்களை நட்டிருக்கின்றனர். இதை முன்னெடுத்து நடத்தியவர் அந்நாட்டின் பிரதமரான அபி அகமது என்பதுதான் இதில் ஹைலைட்.இதற்குமுன் ஒரே நாளில் 8 லட்சம் தன்னார்வலர்கள் ஒன்று சேர்ந்து 5 கோடி மரங்களை நட்டதுதான் சாதனை. இது நடந்தது இந்தியாவில்!l

த.சக்திவேல்