12 வயது சிறுமியின் இலவச நூலகம்!



கொச்சி மட்டஞ்சேரியில் உள்ள யசோதாவின் வீடு எப்போதும் மக்களால் நிறைந்து கிடக்கிறது. தனது வீட்டுக்குள்ளேயே அழகான ஒரு நூலகத்தைத் திறந்திருக்கிறார் 12 வயதான யசோதா. இந்த நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்து புத்தகம் எடுக்க கட்டணம் இல்லை.
காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை நூலகம் திறந்திருக்கும். யசோதா பள்ளிக்குப் போன பிறகு அவரின் அப்பாவோ அம்மாவோ
 நூலகத்தைக் கவனித்துக் கொள்கிறார்கள்.

நூலகத்தைப் பற்றி முகநூலில் யசோதா பதிவிட, ஏராளமான புத்தகங்கள் குவிந்திருக்கின்றன. 2 ஆயிரம் புத்தகங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நூலகத்தில் இப்போது 3,500க்கும் மேலான புத்தகங்கள் இருக்கின்றன.

ஆங்கிலம், மலையாளம், இந்தி, சமஸ்கிருதம், கொங்கணி என பல்வேறு மொழிகளில் வெளியான நாவல்கள், கதைகள், கவிதைகள் உட்பட புத்தகங்கள் நூலகத்தை நிறைக்கின்றன. எடுத்த புத்தகத்தை 15 நாட்களுக்குள் திருப்பித் தரவேண்டும். தாமதமானால் அபராதம் இல்லை!       
                        
த.சக்திவேல்