விருது!



ரீடர்ஸ் வாய்ஸ்

காலத்தின் கட்டாயமாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது ‘TREE’ ஆம்புலன்ஸ். அரசே முன்வந்து நடத்துகிற ‘FREE’ ஆம்புலன்ஸாக அது சாமான்ய மக்களுக்கும் கிடைத்தால் நன்றாக இருக்கும்.
- முரளி, நங்கநல்லூர்; ஆத்மநாதன், ஆற்காடு; கோவிந்தராஜ், தில்லை கங்கா நகர்; நிலவழகு, நீலாங்கரை; செம்மொழி, சேலையூர்; கவுரிநாத், பரங்கிமலை; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; சாய்கவின், பொள்ளாச்சி.

வாசகர்களின் கேள்விகளுக்கு குஷ்பூ அளித்திருந்த பதில்களில் அவரது கள்ளங்கபடமற்ற உள்ளம் வெளிப்பட்டது.
- கொ.சி.சேகர்; பெங்களூரு; ஜெயசந்திர பாபு, மடிப்பாக்கம்; அமிர் பத்ரா, சென்னை; இலக்சித், மடிப்பாக்கம்; புகழ்மதி, ஆதம்பாக்கம்; பிரேமா பாபு, சென்னை; ஆர்.ஜெ.சி, சென்னை; ஜெயராமன், கோவிலம்பாக்கம்; ப.மூர்த்தி, பெங்களூரு; ரவிக்குமார், பொள்ளாச்சி.

அரசுப்பள்ளிகளின் நல் மாற்றத்திற்கு வழிகாட்டிய வகையில் இந்த ‘ராட்சசி’யை வரவேற்கலாம் என்ற ‘குங்குமம்’ விமர்சனக் குழுவின் பாராட்டு அப்படத்திற்கான ஆகச்சிறந்த விருது.
- தா.சைமன் தேவா, விநாயகபுரம்; மனோகர், மேட்டுப்பாளையம்; மாளவிகா ரமேஷ், மாம்பலம்; ஜெர்லின், ஆலந்தூர்; கொ.சி.சேகர். பெங்களூரு; சாய்கவின், பொள்ளாச்சி; கலிவரதன், கீழ்க்கட்டளை; மகேஸ்வரி, பொள்ளாச்சி.

மனிதக் கழிவை மனிதனே அகற்றுகின்ற அவல நிலைக்கு முடிவு கட்டாமல் டிஜிட்டல் இந்தியா கனவு காண்பது பிணத்திற்கு கோட்டும் சூட்டும் அணிவது போன்றதாகும்.
- த.சத்தியநாரயணன், அயன்புரம்;  சங்கீத சரவணன், மயிலாடுதுறை; பி.சாந்தா, மதுரை; எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்; அ.யாழினி பர்வதம், சென்னை; டி.எஸ்.தேவா, கதிர்வேடு; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பூத்திருக்கும் புதுமலர் லவ்லின் சந்திரசேகரின் பேட்டி லவ்லி.
- க.நஞ்சையன், பொள்ளாச்சி; சம்யுக்தா சுதாகர், மடிப்பாக்கம்; வெ.லட்சுமி நாராயணன், வடலூர்; டி.முருகேசன், கங்களாஞ்சேரி; பிரேமா குரு, சென்னை.

மெட்ராஸ் தியேட்டர்கள் பற்றிய கட்டுரையைப் படித்ததும் அந்தக் கால நினைவு மனதில் நிழலாடியது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; இராம.கண்ணன், திருநெல்வேலி; தா.சைமன் தேவா, விநாயகபுரம்.

வைரமுத்து போன்ற தமிழறிஞர்கள் நாடாளுமன்றத்துக்குச் செல்ல வேண்டும். நாடாளுமன்றத்தில் வைரமுத்துவின் தமிழ்க்குரல் கேட்க வேண்டும்.
- ப.மூர்த்தி, பெங்களூரு; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; அரிகிருஷ்ணன், கோணலூர்.