முதல் ஆழ்கடல் உணவகம்இதோ வந்துவிட்டது உலகின் மிகப்பெரிய ஆழ்கடல் உணவகம். ேநார்வேயின் தெற்குப் பகுதியில் உள்ள நார்த் கடலுக்குள் 5 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள இந்த உணவகத்துக்கு ‘அண்டர்’ என்று பெயர்.
ஐரோப்பாவின் முதல் ஆழ்கடல் உணவகமும் இதுவே.ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய அளவில் இருக்கை வசதிகள் மற்றும் வாடிக்கையாளர்களைக் கவனிக்க 40 பணியாளர்கள், அனைத்து வகையான உணவுகளையும் சமைக்க 10 செஃப்கள்!

ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே ‘அண்டரி’ல் சாப்பிடுவதற்காக ஏழாயிரம் பேர் முன்பதிவு செய்துவிட்டு காத்துக்கொண்டிருக்கின்றனர். 18 வகையான கடல் உணவுகள் மற்றும் மதுபானம் அடங்கிய ஒரு காம்போவின் விலை மட்டுமே 30 ஆயிரம் ரூபாய்! ‘‘உலகிலுள்ள சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கணும். அதுதான் எங்கள் இலக்கு...’’ -என்கிறார் அண்டரின் நிர்வாகிகளில் ஒருவரான உபோஸ்டட்.

சக்தி