3 பில்லியன் போலிக் கணக்குகள்தலைப்பைப் படித்ததும் எந்த வங்கியில் என்று கேட்க வேண்டாம்.  இது கடந்த வருடம் டிசம்பரிலிருந்து இந்த வருடம் மே வரையிலான ஆறு மாத காலத்தில் ஃபேஸ்புக் நிர்வாகம் நீக்கிய போலிக் கணக்குகளின் எண்ணிக்கை.
ஃபேஸ்புக்கில் தீவிரமாக இயங்கி வரும் பயனாளிகள் கொடுத்த ரிப்போர்ட்கள் மற்றும் ஃபேஸ்புக் ஊழியர்கள் இரவு பகலாக உழைத்து கண்டுபிடித்த தகவல்களின் அடிப்படையில் 3 பில்லியன் போலிக் கணக்குகளை நீக்கியிருக்கிறார்கள்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஃபேஸ்புக்கை முறையாக பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையே 2.3 பில்லியன் தான். தவிர, வன்முறையைத் தூண்டும் புகைப்படங்கள், பதிவுகள் மற்றும் சர்ச்சையைக் கிளப்பும் பதிவுகள், மதம், கடவுள் போன்ற மனித உணர்வுகளை கேலி செய்யும் பதிவுகள் என 70 லட்சம் பதிவுகளை நீக்கியிருக்கிறது ஃபேஸ்புக். கடந்த வருடம் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மட்டும் 1.5 பில்லியன் கணக்குகளை பிளாக் செய்தது ஃபேஸ்புக். இருந்தாலும் போலிக் கணக்குகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

சக்தி