கடன் தேசத்தை முறிக்கும்!இந்தியக் கிராமங்களில் வாழும் 60 சதவீதத்தினரை அரசின் கடன் திட்டங்கள் சென்றடைவதில்லை. தவிர, ஐந்தில் ஒரு விவசாயிக்கு பெரும் சவாலாக இருப்பது பருவநிலை மாற்றம் தான்...’’ என்று அதிர்ச்சியளிக்கிறது சமீபத்திய ஆய்வு. ‘‘அரசின் கடன் கிடைக்காமல் தனியாரிடம் கடன் வாங்கும் ஏழைகள் அதிக வட்டி கட்ட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்...’’ என்கிறது அந்த ஆய்வு.

‘‘அரசின் திட்டங்கள் மக்களுக்குப் போய்ச் சேராமல் இருப்பது அரசுக்கும் மக்களுக்கும் இடையில் உள்ள தூரத்தையே காட்டுகிறது...’’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.இந்த நிலை மாறாமல் ஒருபோதும் இந்தியா முன்னேறாது என மக்கள் மீது அக்கறை உள்ளவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.