டேப்லெட் இயக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே ஜீன்ஸ் வாங்கலாம்!



தென்கொரியாவின் சியோல் நகருக்குச் சென்றால் வாடிக்கையாளர்களால் ‘சூப்பர் கடை’ என்று அன்புடன் அழைக்கப்படும் அந்தத் துணிக்கடையை நீங்கள் பார்க்கலாம்.

விடுமுறையின்றி 24 மணி நேரமும் திறந்திருக்கிறது. அங்கே விதவிதமான ஜீன்ஸ் ஆடைகள் கொட்டிக் கிடக்கின்றன. சேல்ஸ்மேன், மேனேஜர் என்று யாருமே இல்லை. தேர்ந்தெடுத்த ஆடையை உடுத்திப் பார்க்க டிரெய்ல் ரூம் வசதியிருக்கிறது. உங்களுக்கு அங்கே ஆடை எடுக்க வேண்டுமானால் டேப்லெட்டை இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

ஆம்; ஆடைக்கான விலையை டேப்லெட் மூலம்தான் செலுத்த முடியும். அத்துடன் அங்கே என்னென்ன ஆடைகள் இருக்கின்றன என்பதை டேப்லெட்டிலேயே பார்த்துக்கொள்ளலாம். பணம் செலுத்தினால் மட்டுமே கடையைத் திறந்து நீங்கள் வெளியே போக முடியும். அதனால் ஒரு துரும்பைக் கூட அங்கிருந்து திருட முடியாது!தென் கொரியாவில் சூப்பர் கடைக்குக் கிடைக்கும் வரவேற்பினால் பலரும் ஆளில்லாத கடையைத் திறக்க முன்வந்திருக்கிறார்கள்.

த.சக்திவேல்