சீப், ஆனால் பெஸ்ட்!‘ரெட்மி நோட் 7 எஸ்’ என்ற புது மாடலை களமிறக்கியிருக்கிறது ‘ஷியோமி’. எப்படியாவது இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையைத் தன்வசமாக்கிவிட வேண்டும் என்பது ‘ஷியோமி’யின் திட்டம்.
இதற்கு ‘ரெட்மி நோட் 7எஸ்’-இல் உள்ள நவீன வசதிகளும் தொழில்நுட்பங்களுமே சாட்சி. 48 எம்பியில் பின்புற கேமரா, 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ், 6.30 இன்ச் டிஸ்பிளே, 4000mAh பேட்டரி திறன், 13 எம்பி செல்ஃபி கேமரா என அசத்துகிறது இந்த போன். விலை ரூ.12,000-லிருந்து ஆரம்பிக்கிறது.