ஆடை இல்லாமல் நடித்தாரா அமலாபால்?ஆடை கிளப்பிய அனல்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஆல் ‘wood’களிலும் நிஜமாகவே செம ‘ஹாட்’ டாபிக் அமலாபால்தான்!அவர் நிர்வாணமாக நடித்த ‘ஆடை’  டீசர் வெளியாகி 50 லட்சம் பேர் பார்த்து ரசித்து படுவைரல் ஆக்கியதில் செம குஷியில் பள
பளக்கிறார் அமலாபால்..

கலர்ஃபுல் ஹீரோயினாக அவர் இருந்த நேரத்திலும் ‘பசங்க 2’வில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா, ‘அம்மா கணக்கு’ படத்தில் ஸ்கூல் படிக்கும் பெண்ணுக்கு அம்மா என போல்டு கேரக்டர்களில் ஸ்கோர் செய்தார்.

இப்போது ‘அதோ அந்த பறவை’யில் அட்வென்ச்சர் பறவையாக சிறகடிக்கும் இவர், ‘ஆடை’யில் கிளப்பிய பரபரப்பில் பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகரில் இருந்து சக ஹீரோயினான டாப்சி வரை அமலாபாலின் துணிச்சலைத்தான் மெச்சுகிறார்கள்.  

‘‘சினிமாவுல நடிக்க வந்து பத்து வருஷங்களாச்சு. ரொம்பவே லோ பட்ஜெட் படத்துலதான் அறிமுகமானேன். நான் நடிக்க வந்த புதுசுல எனக்கு கேரவன் வசதி கூட கிடையாது. ‘மைனா’ பண்ணும்போது, டைரக்டர் என்ன சொல்றாரோ அதை உணர்ந்து நடிச்சேன். அந்தப் படம் பெரிய ஹிட் ஆகும்னு நினைச்சுக் கூடப் பார்க்கலை.

ஆனா, எல்லா நேரங்களிலும் சினிமாவை நேசிக்கறேன். கடினமா அப்பவும் இப்பவும் உழைக்கறேன்.இந்த passionதான் என்னை இந்தளவுக்கு கொண்டு வந்திருக்குனு நினைக்கறேன். நடித்த படங்கள் கத்துக் கொடுத்த பாடங்கள் எக்கச்சக்கம். அதன் வழியாதான் சினிமாவை, சினிமாத்துறையை புரிஞ்சுக்கிட்டேன். எப்ப மன அழுத்தத்துக்கு ஆளானாலும் யோகா என்னை அதுல இருந்து மீட்டுடும்...’’ என ரிலாக்சாக பேசியவரிடம் மெல்ல ‘ஆடை’ டீசர் குறித்து பிட்டு போட்டோம்.

‘‘அந்த டீசருக்கு இவ்வளவு வரவேற்பு கிடைச்சிருப்பது உண்மைலயே சந்தோஷமா இருக்கு. எல்லா திசைகள்ல இருந்தும் பாராட்டு குவியுது. ரியலி... ரியலி... ஐ’ம் ஹேப்பி! சந்தேகமே இல்லாம இந்தப் படம் என்னை அடுத்த கட்டத்துக்கு கூட்டிட்டுப் போயிருக்கு. தனிமனித சுதந்திரம், சுய ஒழுக்கம் பத்திதான் இந்த ‘ஆடை’ பேசுது. இப்படி ஒரு துணிச்சலான கேரக்டரைக் கொடுத்த ரத்னகுமார், ரொம்பவே டேலன்ட்டான இயக்குநர்...’’ என சிலிர்க்கும் அமலாபால், நிர்வாணமாக நடித்தது பற்றி உதடு திறக்காமல் இருக்கிறார்.   

அந்த ரகசியத்தை யூனிட்டில் விசாரித்தால்…  கிடுகிடுக்க வைக்கிறார்கள். ‘‘இது வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம். த்ரில்லர். இந்தக் கதைக்கு டீசர்ல நீங்க பார்த்த காட்சிகள் அவசியம். இதைப் புரிஞ்சுகிட்டு, ஹீரோயின் கேரக்டரின் முக்கியத்துவத்தை உணர்ந்து ‘கட்’களை குறைத்து சென்சார் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தது.

அந்தக் காட்சிகள் படமாகும்போது ஸ்பாட்ல இயக்குநர், ஒளிப்பதிவாளர் உட்பட விரல்விட்டு எண்ணக்கூடியவங்க மட்டும்தான் இருந்தாங்க. முக்கியமான விஷயம்- அமலாபால் ஸ்கின் டிரெஸ் அணிஞ்சிருந்தாங்க! ஸோ, அவங்க அசவுகரியமா ஃபீல் பண்ணலை.

‘பண்டிட் குயின்’ படத்துல சீமா பிஸ்வாஸ் இதுமாதிரி நடிச்சதைப் பார்த்தப்ப நமக்கு ஆபாசமா தோணிச்சா..? அந்த கேரக்டர் மேல பரிவும் பரிதாபமும்தானே ஏற்பட்டது?அப்படியொரு உணர்வை அமலாபால் கேரக்டர் ஏற்படுத்தும்...’’ என்கிறார்கள். எது எப்படியோ... டீசர் ஹிட் அடித்திருக்கிறது. சூட்டையும் கிளப்பியிருக்கிறது!