COFFEE TABLE



குஷியில் பிகினி!

மகிழ்ச்சியாக இருக்கிறார் காத்ரினா கைஃப். இன்ஸ்டாவில் 2 கோடி ஃபாலோயர்களைத் தொட்டுவிட்ட ஹேப்பி மொமன்ட் அது. இந்த மகிழ்ச்சியான தருணத்தை அழகான கடற்கரை ஒன்றில் பிகினி காஸ்ட்யூமில் கொண்டாடித் தீர்த்திருக்கிறார். அந்தக் கொண்டாட்டத்தை மினி வீடியோவாகவும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். கண்களைக் குளிர வைக்கும் காத்ரினாவுக்கு ஹார்ட்டின்களும், லைக்குகளும் கொட்டுகின்றன.

உணவே ஆபத்து!

புகைதான் நமக்குப் பகை என்று இதுவரை நினைத்திருந்தோம். ஆனால், ‘‘புகைப் பழக்கத்தை விட மோசமான எதிரி உணவுப் பழக்கம்...’’ என்று அதிர்ச்சியளிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.‘‘மோசமான உணவுப் பழக்கம் என்றால் ஜங்க் ஃபுட் என்கிற ஃபாஸ்ட் ஃபுட் மட்டுமல்ல… ஆரோக்கியமில்லாத உணவு எல்லாமே மோசமான உணவுதான்...’’ என்கிறது அந்த ஆய்வு. ‘‘உலகளவில் ஆரோக்கியமில்லாத உணவுப் பழக்கத்தால் வருடத்துக்கு சுமார் 1 கோடிப் பேர் உயிரிழக்கின்றனர். குறிப்பாக கரையாத கொழுப்பு உள்ள உணவுகள்தான் இந்த மரணங்களுக்கு முக்கிய காரணம்...’’ என்கின்றனர் நிபுணர்கள்.

ஹாய் கோவா!

தமிழில் கைவசம் இரண்டு படங்களை வைத்திருக்கும் மடோனா செபாஸ்டியன், சம்மர் ட்ரிப்பாக கோவா சென்று வந்துள்ளார். அங்கே உள்ள மன்ட்ரம் கடற்கரை ரிசார்ட்டின் தென்னை மர நிழலில் ஹாயாக இளைப்பாறியிருக்கிறது பொண்ணு. அந்த ரிலாக்ஸ் நிமிடங்களைப் புகைப்படமாக்கி இன்ஸ்டாவில் தட்டிவிட, அது இரண்டு லட்சம் லைக்குகளைத்
தாண்டிவிட்டது

புர்கா அணிந்த கணவர்!

புதிதாக கல்யாணமான ஓர் இஸ்லாமிய தம்பதிதான் இணையத்தில் ஹாட் வைரல்.  சமீபத்தில் அந்த தம்பதியினர் ஒரு ஹோட்டலுக்குச் சென்றிருக்கின்றனர். தனக்குப் பதிலாக கணவரைப் புர்கா அணிய வைத்து அழகு பார்த்திருக்கிறார் அந்த மனைவி. அத்துடன் புர்கா அணிந்த கணவருடனான செல்ஃபியை அவர் இணையத்தில் தட்டிவிட, சில மணி நேரங்களில் வைரலாகிவிட்டது அந்தப் புகைப்படம். இவையெல்லாம் அரங்கேறியது பாகிஸ்தானில் என்பதுதான் இதில் ஹைலைட்.

ஒயர்லெஸ் பட்ஸ்!

ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர், லேப்டாப் உள்ளிட்ட புளூடூத் வசதிகொண்ட அனைத்து கேட்ஜெட்களுடனும் தன்னை இணைத்துக்கொள்ளும் திறன்கொண்ட ஒயர்லெஸ் இயர்பட்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது ‘நோக்கியா’. ‘காதில் இயர்பட்ஸ் இருக்கிறது’ என்ற உணர்வே இல்லாத அளவுக்கு இதனை மெலிதாக வடிவமைத்திருக்கிறார்கள். எளிதாக சார்ஜ் செய்ய சார்ஜிங் கேஸ் வசதியும் இதிலுள்ளது. விலை ரூ.9,999.

குங்குமம் டீம்