கீர்த்தி சுரேஷ்
அஞ்சு பன்ச்
*அம்மாதான் செல்லம். ஆனால், ஷூட்டிங்கிற்கு யாரையும் அழைத்து வருவதில்லை.
*அடுத்து இந்திப்படத்தில் கால்ஷீட் கேட்கிறார்கள். சில பிடித்த நடிகர்களின் லிஸ்ட் அவரிடம் இருக்க, அதில் ஒருவராக இருந்தால் ரெடி.
*இஷ்டமான நடிகர் லியனார்டோ டி கேப்ரியோ. அவர் இளமையிலிருந்து புரஃபஷனல் நடிகராக ஆனது வரை கேப்ரியோவின் எல்லா டிவிடி-களையும் சேகரித்திருக்கிறார்.
*பயணங்களில் விருப்பம் அதிகம். திருமணமான சகோதரிதான் நெருங்கிய தோழி. நினைத்தால் போய் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு திரும்பிவிடுவார்கள்.
*வீட்டிலிருந்தால் பேண்ட், டி-சர்ட். நண்பர்களோடு அவுட்டிங் என்றால் ஜீன்ஸ். வெளி நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த நேர சாய்ஸ்!
- நன்மதி
|