வாழும்போதே சொர்க்கம்டா



ஏரியா லிட்டரேச்சர்

சீத்தலைப் பாட்டனார்

பேமானி சோமாறி
பல்லுவிளக்கா மூதேவி
நல்ல புத்தி
சொல்றேண்டா
நல்லா வாழ
பண்றேண்டா
சொன்னாக்கா கேளுடா
நான் உன் அண்ணன்
போல உள்ளேன்டா!

குடியை கெடுக்கும் குடி
உனக்கு தேவையா?
புள்ள குட்டி
மூஞ்சை பாருடா
உன்ன விட்டா
அதுகளுக்கு யாருடா!

பொழைப்பை பார்த்து
காசு சம்பாரி
புள்ளக்குட்டியை
படிக்கவை
வூடு கட்டு. சேர்த்து வையி.
வாழும்போதே
சொர்க்கம்டா  
இப்படி
வாழ்ந்து பார்த்தா
தெரியும்டா!

பீடியை வலிக்க
வலிக்க இன்பம்
முழுசா வலிச்சா
சொர்க்கம்
கேன்சர் வந்து
செத்தாதான்டா
சொர்க்கம்
அதை புரிஞ்சுக்கோடா!