இன் டிரெஸ் டிங்!



ரீடர்ஸ் வாய்ஸ்

ஷாருக்கானின் எக்ஸ்குளூசிவ் அள்ளுது. தற்பெருமை பேசுவதில் அவர் ‘ஜீரோ’. ‘தமிழ்ல நடிக்கக் கேட்டு யாரும் வரலை’ங்கிற அவரோட ஏக்கம் புத்தாண்டில்  பூர்த்தியாகட்டும்.
- சந்திரமதி, மடிப்பாக்கம்; அ.யாழினி பர்வதம், சென்னை; ப.மூர்த்தி, பெங்களூரு; ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; பிரேமா ராஜ்குமார், குன்னூர்.

சூட்டோடு சூடாக வந்த ‘சீதக்காதி’ விமர்சனம், நல்ல விஷயங்களை உடனே பாராட்டிவிட வேண்டும் என்ற உங்களின் பரந்த மனதைக் காட்டியது.
- அ.யாழினி பர்வதம், சென்னை; முரளிதரன், மதுரை; லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

இந்தியாவின் முதல் மகளிர் கார் பந்தயக்குழுவை அறிமுகப்படுத்தியது எனர்ஜி டானிக்.
- த.சத்தியநாராயணன்,அயன்புரம்; அ.யாழினி பர்வதம், சென்னை; வளையாபதி, தோட்டக்குறிச்சி; சண்முகராஜ், திருவொற்றியூர்; வெ.லட்சுமி நாராயணன், வடலூர்;  ஜனனி கார்த்திகா, திருவண்ணாமலை; மாணிக்கவாசகம், கும்பகோணம்.

‘உயிர் பறிக்கும் காற்று மாசு’ பற்றி ரெட் அலர்ட் கொடுத்த ‘குங்குமத்’திற்கு சல்யூட்!
-அ.யாழினி பர்வதம், சென்னை; கே.சிவக்குமார், சீர்காழி; கைவல்லியம்,மானகிரி; நஞ்சையன், பொள்ளாச்சி; சாந்தா,மதுரை; மனோகர், மேட்டுப்பாளையம்; மாணிக்கவாசகம், கும்பகோணம்.

பின்னி மில்லுக்கே கூட்டிச் சென்று பின்னிபெடலெடுத்துவிட்டது ‘தலபுராணம்’.
- பிரேமா, குரோம்பேட்டை;நஞ்சையன், பொள்ளாச்சி;கைவல்லியம், மானகிரி;மாணிக்கவாசகம்,கும்பகோணம்.

வாரா வாரம் சீத்தலைப் பாட்டனாரின் ‘ஏரியா லிட்ரேச்சர்’ செம கலக்கல்.
-சண்முகராஜ், திருவொற்றியூர்.

எத்தனை காலம்தான் காவிரிக்கு ஏங்குவது? ‘மேகதாது’ கட்டுரை கவலையளித்தது.
- அ.யாழினி பர்வதம், சென்னை; பிரேமா ராஜ்குமார், குன்னூர்.

‘இணையத்தைக் கலக்கும் ஈழ அகதிகளின் ராப் இசை’ அல்ட்ரா ஆச்சர்யம்.
- பிரேமா ராஜ்குமார், குன்னூர்; சண்முகராஜ், திருவொற்றியூர்; வெ.லட்சுமி நாராயணன், வடலூர்; ஜனனி கார்த்திகா, திருவண்ணாமலை.

காஸ்ட்யூம் சத்யாவின் பேட்டி இன்‘டிரெஸ்’டிங்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்;அ.யாழினி பர்வதம், சென்னை; மயிலை.கோபி, திருவாரூர்; ப.மூர்த்தி, பெங்களூரு; லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

த்ரிஷாவின் ஸ்டில் உரித்த ஆரஞ்சுப்பழம் போல் நச்.
- ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை.