டாப் 9 கோலிவுட் கிசுகிசு



செவத்த தோல் ஆசை!

ஆவரேஜ் ஹீரோதான் அவர். அவரது படத்தின் ஸாங் ஷூட், பரபரக்கிறது. கரெக்ட் டைமுக்கு ஷாட்டுக்கு வந்த ஹீரோ, மேக்கப், காஸ்ட்யூமுடன் ஆட ரெடியானார். அடுத்த செகண்டே, ‘பேக்கப்’ என சொல்லிவிட்டு போய்விட்டாராம்.

‘ஹீரோ ஏன் கிளம்பிப்போனார்? அவரை யாரும் டிஸ்டர்ப் பண்ணிட்டாங்களா?’ என யூனிட்டே மண்டையைப் போட்டுக் குழம்பிக் கொண்டிருக்கிறது.அப்புறம்தான் விஷயம் லீக் ஆகியிருக்கிறது. ‘அன்னிக்கு ஆட வந்த குரூப் டான்சர்ஸ் வெள்ளை வெளேரென இல்லாததுதான் ஹீரோவின் அப்செட்டுக்கு காரணமாம். இதுக்கெல்லாமா பேக்கப்? தலையிலடிக்கிறது கோடம்பாக்கம்.

உனக்கு.... அடிக்கத் தெரியுமா?

இருட்டில் படமெடுக்கும் இயக்குநர் அவர். அவரிடம் உதவியாளராக சேர இரண்டு பையன்கள் அவர் அலுவலக கதவைத் தட்டி
யிருக்கிறார்கள். கதவைத் திறந்த இயக்குநர் அவர்களிடம் ‘உனக்கு .... அடிக்கத் தெரியுமா?’ (கோடிட்ட இடத்தை நிரப்புக) என ‘ரெண்டாம் குத்து’ ரேஞ்ச்சில் ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார்.

ரெண்டு பையன்களில் ஒருத்தன் வெட்கப்பட்டு ‘அப்படி பண்ணினதில்லை’ எனச் சொல்லியிருக்கிறான். கடுப்பான இயக்குநர் அவனிடம் ‘கெட் அவுட்’ எனச் சொல்லிவிட்டு, இன்னொரு பையனைப் பார்த்தார். அவன் ரொம்ப கூலாக ‘எனக்குத் தெரியும்’ எனச் சொல்லவும், பல்லிளித்தவர் அவனை தனது டீமில் சேர்த்திருக்கிறார். என்ன வகை டெஸ்ட்டோ?

நள்ளிரவில் ஹீரோயின் ரூம் கதவைத் தட்டிய டைரக்டர்!

வரிசையாக மினிமம் பட்ஜெட்டில் தயாரித்தும், இயக்கியும் வரும் டைரக்டர் அவர். புதுமுக ஹீரோயின்கள்தான் அவரது ஆல்டைம் சாய்ஸ்.
அப்படி சமீபத்தில் கமிட் ஆன ஹீரோயினுடன் முதல் ஷெட்யூலும் ஷூட் கிளம்பி விட்டார்கள்.

போன இடத்தில் அந்த டைரக்டர் ஃபுல் மப்பில், ஹீரோயின் தங்கியிருந்த ரூம் கதவை தட்டோ தட்டென தட்டியிருக்கிறார். பயந்து போன பொண்ணும், அம்மாவும் கதவைத் திறக்காமலேயே இருந்துவிட, ஹோட்டல் ஊழியர்கள் வந்து டக்கரை கூல் செய்து அனுப்பினார்களாம்.

தொழிலதிபர் கஸ்டடியில் ஹீரோயின்!

ஹீரோயினாக நடித்த எந்த படமும், குறும்படம் உள்பட ஹிட் ஆகவில்லை. ஆனாலும் அந்த மேகமாய் வந்து போகும் ஹீரோயின் செம செட்டில்டாம். சொகுசு காரில்தான் உலாவாம். எல்லாம் பெரிய இடத்து தொழிலதிபரின் கஸ்டடியில் இருப்பதால் கிடைத்த வரம் என்கிறது டச்சப் வட்டாரம்.

நடிகர் செய்த மசாஜ்!

‘இனி கெட்டபெயரே வாங்க மாட்டேன்’ என அப்பாவின் தலையிலடித்து சத்தியம் பண்ணின ஹீரோ, ஆன்மீகத் தலங்களுக்கு விசிட் அடித்தபின் ஷூட்டிங் கிளம்பிவிட்டார். ஆனால், இதுக்கெல்லாம் முன், பேட்டரியை சார்ஜ் செய்துவிட்டாராம். கடவுளின் சொந்த தேசத்துக்குச் சென்று ஜெகஜோதியாக பிரகாசித்துவிட்டுத்தான் சென்னைக்கே திரும்பினாராம்.

உஷாரான காமெடி

காமெடி நடிகர்களுக்கு இது போதாத காலம் போலிருக்கிறது. புயலும், பூரியும் சொத்து வாங்கும் விஷயத்தில் கோட்டை விட்டதைப் போல, தானும் ஆகிவிடக் கூடாது என ‘ஒன்லைன் பன்ச்’ பேசும் நடிகர் உஷாராகியிருக்கிறார்.

சொத்து வாங்கிப் போடச் சொல்லி ஏற்கெனவே காசு கொடுத்த பார்ட்டிகளிடம்... ‘இது ராத்திரியும் பகலும் தூங்காம, சாப்பிடாமக்கூட சம்பாதிச்ச காசு. ஏமாத்திடாதீங்கடா...’ என முன்னெச்சரிக்கையாக சொல்லியும் வருகிறாராம்.

தமன நடிகையைப் பார்த்து சூடு போட்ட பூனை!

கொரோனாவுக்கு முன் தமன நடிகை தைரியமாக படப்பிடிப்புக்குக் கிளம்பினார். அவரைப் பார்த்து கோலிவுட்டின் ‘டாப்’ ஹீரோயின் காத்து வாக்குல போயிட்டு வந்துடலாம் என ஒரு ஷெட்யூலுக்கு திட்டமிட்டார். அதற்குள் தமன நடிகை கொரோனாவுக்குள் விழுந்து எழுந்துவிட்டதில், டாப் ஏரியா ‘அடுத்த ஆண்டு பாத்துக்கலாம்’ என கப்சிப்பாகிவிட்டதாம்.

என் ரேட் இது!

வாரிசு நடிகை கைவசம் ஒரு படம்தானே இருக்கிறது. கமிட் செய்வோம் என புறப்பட்டிருக்கிறார் ஒரு தயாரிப்பாளர். ‘ஒன்றரைக்கோடி’ கேட்டிருக்கிறார் அந்த ஹீரோயின். ‘உங்களுக்கு அவ்ளோ மார்க்கெட் இல்லீயே...’ என லகரத்தில் பேரம் பேசினார் தயாரிப்பாளர்.

‘இஷ்டம்னா கமிட் பண்ணுங்க. இல்லேனா உங்களுக்கு பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்’ என பியானோவை ப்ளே செய்தபடி நடிகை சொன்னதில் கடுப்பாகி திரும்பியிருக்கிறார் அந்த டாப் புரொட்யூசர்.

எம்.இக்னேஷியஸ்