நான் விஜய் ரசிகை!சிலிர்க்கும் ஆண்ட்ரியா



கோலிவுட்டில் மல்டி டேலன்டட் பெண் ஆண்ட்ரியாதான். பாடகி, தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், நடிகை, பாடலாசிரியர், மியூசிக் கம்போஸர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்... என பன்முகமாக ஜொலிப்பவர். இப்போது விஜய்யின் ‘மாஸ்டர்’, சுந்தர்.சி.யின் ‘அரண்மனை 3’, மிஷ்கினின் ‘பிசாசு 2’ தவிர ‘மாளிகை’, ‘வட்டம்’ என அசத்தல் படங்களும் கைவசம் வைத்திருக்கிறார்.

சமீபத்தில் இண்டிபெண்டன்ட் ஆல்பம் ஒன்றிற்காக ‘எழுந்து வா...’ என்ற பாடலை எழுதி (ஆங்கிலத்தில்தான்) இசையமைத்து அதில் பாடியுமிருக்கிறார். யூடியூப்பில் அதுதான் வைரல் ஹிட்.‘‘கொரோனா அச்சுறுத்தலால வாழ்வாதாரத்தை இழந்து பலரும் தவிக்கறாங்க.

அவங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாதான் ‘எழுந்து வா...’வை உருவாக்கியிருக்கோம். ப்ரித்வி சந்திரசேகர் தயாரிச்சிருக்கார். என்னோடு சேர்ந்து ஏடிகே இசையமைச்சிருக்கார்.

சின்ன வயசுல இருந்தே மியூசிக்ல எனக்கு இன்ட்ரஸ்ட். எட்டு வயசுல மேடைல பாட ஆரம்பிச்சுட்டேன். பத்து வயசுல எங்க வீட்ல எனக்கு ஒரு கீபோர்ட் பரிசு கொடுத்தாங்க.

எங்க பாட்டி ஒரு பியானோ பிளேயர். அவங்கதான் என் மியூசிக் டீச்சர். கிளாசிக்கல் பியானாவை அவங்கதான் கத்துக் கொடுத்தாங்க. அப்புறம் கொயர்ல பாட ஆரம்பிச்சுட்டேன். படிச்சது கான்வென்ட்டுல. அங்க கட்டாயம் கொயர்ல பாடல்கள் உண்டு. இப்படியே என் இசை டெவலப் ஆச்சு. என் லைஃப்ல எட்டுல இருந்து பதினாலு வயசு வரை ஹேப்பி இயர்ஸ்...’’ ஆனந்தமாகிறார் ஆண்ட்ரியா.

நீங்க ஒரு காஃபி பிரியர் ஆச்சே..?
கரெக்ட். காஃபி அவ்ளோ பிடிக்கும். அமெரிக்கா, ஆஸ்திரேலியானு எங்க பறந்தாலும் அங்க ஸ்பெஷலான காஃபி கொட்டைகளை வாங்கி வந்து, வீட்ல நானே அரைச்சு ஃபில்டர் காஃபி ரெடி பண்ணிடுவேன். லாக்டவுனுக்கு முன்னாடி கிச்சன் பக்கமே போனதில்ல. அப்படியே போனாலும் காஃபி போடத்தான் போவேன். லாக் டவுன் எல்லாத்தையும் எல்லாரையும் மாத்திடுச்சு.  

வழக்கமா ஸ்டேஜ் ஷோ பண்றது பிடிக்கும். லாக்டவுனால ஸ்டேஜ் ஷோஸ் பண்ண முடியாம போச்சு. இன்ஸ்டாவுல ஜூம்ல ஷோ ட்ரை பண்ணினோம். ஸ்டேஜ்  மாதிரி ஃபீல் கிடைக்கல.ஆனா, ஒரு நன்மை. விதவிதமா சமைக்க கத்துக்கிட்டேன். இப்பக்கூட பாலக் பன்னீர் ரெடி பண்ணிட்டிருக்கேன். எனக்கு ரொம்ப பிடிச்ச டிஷ்.  அப்புறம் கேக் வகைகள் நிறைய ரெடி பண்ணினேன்.
இன்னும் நிறைய படங்கள்ல நடிக்கலாமே?

நடிக்கலாம்தான். ஆனா, எனக்கு கதை பிடிச்சிருக்கணுமே! நல்ல கதைகள் வந்தா நடிக்க ரெடியா இருக்கேன். ஒருவேளை எனக்கு கதை பிடிக்கலைனா கூட என்னை கன்வின்ஸ் செய்தா நடிப்பேன். நூறு பர்சன்ட் கரெக்ட்டா கணிச்சு, செலக்ட் பண்றேன்னு சொல்ல மாட்டேன். சில கணிப்புகள் தப்பாகியிருக்கு. நம்ம கணிப்புல 75 சதவிகிதம் சரியா வந்தா அதுவே சக்சஸ்தான்.

எப்படி இருந்துச்சு ‘மாஸ்டர்’ அனுபவம்?
அமேஸிங் எக்ஸ்பீரியன்ஸ். இந்தாண்டின் மிகப்பெரிய படத்துல ஒர்க் பண்ணியிருக்கேன். திறமையான இயக்குநர் டீம்ல ஒர்க் பண்ணினது சந்தோஷம். ‘மாஸ்டர்’ல நடிக்கக் கேட்கும் போது, கொஞ்சம் தயங்கினேன். அப்புறம் விஜய் சார் படமாச்சே, அவங்க ஆடியன்ஸுக்கும் நம்மள பிடிக்கும்னு கன்வின்ஸ் ஆகி, கமிட் ஆனேன்.

ஒருத்தரை டிவில பார்த்து, அவங்களுக்கு ரசிகை ஆகறது ஒரு ரகம். ஆனா, ஒருத்தர் கூட நேர்ல பேசி பழகி ஒர்க் பண்ணின பிறகு அவங்களோட ஃபேனா மாறுவது பெரிய விஷயம். அப்படித்தான் விஜய் சாரோட ரசிகையானேன். அவர் எவ்வளவோ சாதனைகள் பண்ணினவர். டாப் ஹீரோ. ஆனா, அவ்ளோ சிம்பிளா பழகறார். அமேஸிங்மேன்.

மை.பாரதிராஜா