ரீடர்ஸ் வாய்ஸ்
சல்யூட்!
 நம்மவர்களின் விசித்திர பழக்கங்களைப் படித்தபோது தலைசுற்றியது. மனிதர்களில் இத்தனை விதங்களா! புதுப்புது பழக்கங்களை அறிந்துகொண்டதோடு, எங்களையும் யோசிக்க வைத்துவிட்டது ‘என்ன பழக்கமோ..?’ - எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; ஜெரிக், சென்னை; வெ.லட்சுமி நாராயணன், வடலூர்; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; ஜெயச்சந்திரபாபு, சென்னை.
முகநூல் நிர்வாகத்தின் முகத்திரையைக் கிழித்து தொங்கவிட்ட ‘ஃபேஸ்புக் உருவாக்கும் தொற்றுநோய்’ கட்டுரைக்கு ஒரு சல்யூட். - ஜெயச்சந்திரபாபு, சென்னை; புனிதவதி, பொள்ளாச்சி; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
‘பழைய பிளாஸ்டிக் பாட்டில்களில் பாதுகாப்பான காம்பவுண்ட் சுவர்’ - சரியான நேரத்தில் கூறப் பட்ட உபாயம். - அ.முரளிதரன், மதுரை; வண்ணை கணேசன், சென்னை; பிரேமா, சென்னை; ஆ.சினிவாசன், எஸ்.வி.நகரம்; எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்; மனோகர், கோவை; சிவக்குமார், சீர்காழி; த.சத்தியநாராயணன், அயன்புரம்; அ.யாழினி பர்வதம், சென்னை; ரவிக்குமார், பொள்ளாச்சி; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; ப.மூர்த்தி, பெங்களூரு; மல்லிகா அன்பழகன், சென்னை.
ரிசர்வ் வங்கியை ‘அப்சர்வ்’ பண்ணிய விதம் அட்டகாசம். - மல்லிகா அன்பழகன், சென்னை; சாந்தா, மதுரை; பிரேமா ராஜ்குமார், குன்னூர்.
‘மகாநதி’ ஷோபனாவின் பேட்டி இனிய சங்கீதம். - வரலட்சுமி முத்துசாமி, கொளத்தூர்; அ.யாழினி பர்வதம், சென்னை; பிரேமா, சென்னை.
‘நாயகி’ வித்யா பிரதீப் விஞ்ஞானியா! ஆனந்தியை நினைத்து ஆடிப்போயிட்டோம். - ஜானகி ரங்கநாதன், சென்னை; ஆனி அஞ்சலின், விநாயகபுரம்; ஜெயச்சந்திர பாபு, சென்னை.
‘பரிசு’, ‘இடமாற்றம்’ - இரண்டு கவிதைகளும் அசத்தல். - பிரீத்தி, செங்கல்பட்டு; எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.
புத்தகக் கண்காட்சி நடக்கும் சமயத்தில் வாசிப்பு பிரியரான ஸ்டண்ட் சில்வாவின் பேட்டியை வெளியிட்டது ஃபென்டாஸ்டிக்; செம டைமிங். - த.சத்தியநாராயணன், அயன்புரம்; பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்; மனோகர், கோவை; மயிலை.கோபி, அசோக் நகர்; அ.முரளிதரன், மதுரை; நஞ்சையன், பொள்ளாச்சி; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; டி.எஸ்.தேவா, கதிர்வேடு; கைவல்லியம், மானகிரி; ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்; வெ.லட்சுமிநாராயணன், வடலூர்.
‘பெட்டிக்கடை’ ஸ்டில்கள் செம ஜில் - லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
இந்த வார ‘பகவான்’ இனிமையோ இனிமை. - இளம்வழுதி, அத்திப்புலியூர்.
சூர்யாவின் ஐந்து பஞ்சுகளும் பஞ்ச தந்திரங்கள் - எஸ்.பூதலிங்கம்,நாகர்கோவில்; மனோகர், கோவை.
|