ஆப்தேவின் மொபைலில் என்ன இருக்கு?!‘ரசனையான பொண்ணு’ விருதை ராதிகா ஆப்தேவுக்கு தாராளமாகக் கொடுக்கலாம். ரொமான்ஸ் துள்ளும் பாப்லோ நெருடாவின் கவிதைகளைத் தேடிப்பிடித்து வாசித்து மகிழும் ஆப்தே, ஹைடெக் வாசகியாக ஜொலிக்கிறார். பாப்லோவின் ஆடியோ புத்தகங்களை தன் மொபைலில் சேகரித்து படப்பிடிப்பு பிரேக்குகளில் எல்லாம் கேட்டுக் கேட்டு குஷியாகிறார்!