ஏரியா லிட்ரேச்சர்-சிலை புராணம்
பீச்சு ரோட்டு நடுவுலே
தாத்தா காந்தி சிலை!
தாத்தா கத்துக் கொடுத்தது
அஹிம்சை
யாரையும் பண்ணாத நீ
இம்சை!

ஸ்பென்சர் பிளாசா
எதுருலே
எம்ஜி.ஆர் சிலை
ஏழைகளை
வாழவெச்ச மவராசன்
அவரோட லைஃப்பு
நமக்கு இன்பர்மேஷன்

அறிவாலயத்தின்
அைணயாவிளக்கு
டாக்டர் கலைஞர்
அனைவரும் சமமென
அறிவிச்சாரு
ஆண்டவனால்
முடியாததெல்லாம்
ஆள்பவரால் முடியுமென
நிரூபிச்சாரு

சிம்சன் சிக்னலிலே
தந்தை பெரியாரு
சுயமரியாதையை
தமிழனுக்கு
கத்துக் கொடுத்தவரு
தடியெடுத்தவரெல்லாம்
தண்டல்காரரல்ல
இவர் தடியெடுத்ததால்
தமிழன் தலைநிமிர்ந்தான்

திநகரு திருமலை
ரோட்டுலே
சிலையா நிக்குறாரு
காமராசரு
மதிய உணவுத்திட்டம்
தந்த மகராசரு
பெரியவங்க
சொன்னதெல்லாம் வேதம்!
இதுதான் நாம
படிக்கவேண்டிய பாடம்!

தேவி தியேட்டர்
இருக்குறது
அண்ணாசாலை
முக்குலே நிக்குது
பாரு அண்ணாசிலை
அண்ணா சொன்னது
கடமை கண்ணியம்
கட்டுப்பாடு
அதை உரக்க உலகுக்கு
எடுத்துப் பாடு!

சீத்தலைப் பாட்டனார்