தெலுங்கு தேசமாகும் அமெரிக்கா!



அமெரிக்காவின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேல் பிறமொழி மக்கள்தான். அண்மையில் இவர்களில் பெரும்பாலானவர்கள் பேசும்  மொழியைக் கண்டறிய குடியேற்ற மையம் செய்த ஆய்வில், பெங்காலியுடன் தெலுங்கு மொழி (57% - 2000 / 2017) முன்னிலை  வகிக்கிறது. தமிழின் விகிதம் 55%.வங்காள மொழியுடன் சரிக்கு சமமாகப் போட்டியிடும் தெலுங்குமொழி ஆந்திரா, தெலுங்கானாவிலிருந்து  அமெரிக்காவுக்கு வந்து அறிவியல்துறைகளில் பணியாற்றுபவர்களால் முன்னணி இடத்தை வகிக்கிறது.

2000 - 17 வரையிலான காலகட்டத்தில் 2,22,977 - 4,15,414 என தெலுங்கு குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதோடு  இந்தி (8 லட்சத்திற்கும் அதிகம்), வங்காளம், தமிழ் ஆகிய மொழிகளும் பெரும்பான்மை மக்களால் பேசப்பட்டு வருகிறது. அமெரிக்க  மக்கள்தொகையில் ஆங்கிலம் அல்லாத மொழிகளைப் பேசுபவர்களின் அளவு 21.8%. வடக்கு டகோடா,  உடா, டிசி, வியோமிங் ஆகிய  வட்டாரங்கள் பிறமொழி மக்களின் கோட்டையாகத் திகழ்கின்றன.

-ரோனி