பாதுகாப்பற்ற மாத்திரைகளுக்கு தடை!



அண்மையில் இந்திய அரசு பாதுகாப்பற்ற மாத்திரைகள் என அடையாளம் காணப்பட்ட 328 மாத்திரைகளுக்கு (FDC) தடை விதித்துள்ளது  (தயாரிக்க, விநியோகிக்க, விற்க). இதில் புகழ்பெற்ற தலைவலி, காய்ச்சல் மாத்திரையான சாரிடானும் அடக்கம்.2016ம் ஆண்டிலிருந்து  கூட்டு மருந்துகளை உள்ளடக்கிய FDC மாத்திரைகளை தடை செய்வதற்கான முயற்சிகளை சுகாதார அமைச்சகம் மேற்கொண்டிருந்தது.

இத்தடையால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்துநிறுவனங்கள் பாதிக்கப்படும். அமலாகிவிட்ட இத்தடையால் குளுகோநார்ம், டாக்சிம் AZ,  லூபிடைசல் உள்ளிட்ட மருந்துகளை இனி மருந்தகங்களில் விற்க முடியாது. உடனே தில்லி உயர்நீதிமன்றத்தை அணுகிய மருந்து  நிறுவனங்களின் வாதங்களை ஏற்று சாரிடான், பிரிடான், டர்ட், ஏஸ் பிராக்‌ஸிவோன் ஆகிய மருந்துகளை விற்கத் தடையில்லை என  ஆர்.எஃப். நாரிமன், இந்து மல்ஹோத்ரா உள்ளிட்ட நீதிபதிகள் உத்தரவு வழங்கியுள்ளனர். ரூ.1.2 லட்சம் கோடி உள்நாட்டு மருந்து  வணிகமுள்ள இந்தியாவில் FDC மருந்துகளின் விற்பனை 50 சதவிகிதம்!

-ரோனி