அங்கீகார கொள்ளை!கொள்ளையர்களிடமிருந்து பணத்தைக் காப்பாற்றிய பணியாளருக்கு வெறும் டீ ஷர்ட்டை பரிசாகக் கொடுத்தால் என்னாகும்? பணம்  அபேஸ்தான்! தில்லியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய தான்சிங் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யப்போகும்போது  கொள்ளையர்களால் தாக்கப்பட்டார். ரூ.80 லட்சத்தை காப்பாற்றியவருக்கு டீ ஷர்ட்டை பரிசளித்து சைலண்டானார் தான்சிங்கின் முதலாளி. மூன்று பெண்கள் திருமணத்திற்கு காத்திருக்க, முதலாளி பணப்பரிசு கொடுப்பார் என நினைத்த தான்சிங் விரக்தியாகி வஞ்சகமாக  பணத்தை லபக்க உடனே பிளான் போட்டார்.

கஸ்டமரிடம் பணத்தைப் பெற தான்சிங்கை முதலாளி நம்பி அனுப்ப, பணத்தை தன் பாக்கெட்டில் போட்ட தான்சிங் உடனே நண்பர்  யாகூப்பின் உதவியை நாடினார். பைக்கை தில்லியில் பார்க் செய்துவிட்டு கார் ஏறி நைனிடாலுக்கு வந்து தான்சிங் தலைமறைவானார். தான்சிங்கின் பைக்கை எடைக்கு போட்டு எவிடென்ஸை அழிக்க தில்லிக்கு வந்த நண்பர் யாகூப், க்ரைம் பிராஞ்ச் போலீசில்  அம்மாஞ்சியாய் மாட்டிக்கொண்டார். பிளானுக்கு கமிஷனாக வாங்கிய மூன்று லட்சம் வங்கிக்கணக்கில் வகையாக சிக்க... இப்போது யாகூப்  க்ரைம் கதையை மெல்ல சொல்லி வருகிறார்!

-ரோனி