சீனாவில் தமிழ் முழக்கம்!



சீனாவின் பெய்ஜிங்கிலுள்ள BFSU என்னும் கல்வி நிறுவனத்தில் இந்தி, வங்காள மொழியோடு புதிதாக தமிழ் மொழியையும் இந்த ஆண்டு  முதல் கற்றுத் தருகின்றனர்.‘‘தமிழ்மொழி கற்க சிரமமாக இருந்தாலும் கற்க ஆர்வமாக உள்ளேன்!” என்கிறார் மாணவி ஃபுபெய் லின்.  நான்கு ஆண்டுகள் தமிழ் இலக்கண இலக்கியங்களை படிப்பவர்கள் ஓராண்டு தமிழ்நாட்டுக்கு விசிட் செய்வார்கள். “மூன்றாம் ஆண்டில்  தமிழ்நாட்டு சுற்றுலா தொடங்கும். தமிழில் பேசவும் எழுதவும் கற்றிருப்பது இப்பயணத்தில் முக்கியம்...” என்கிறார் ஆசிரியை ஈஸ்வரி  என்கிற ஸூ ஷின்!

மொழிப்பாடத்துடன் பொருளாதாரம், தகவல்தொடர்பு, சட்டம், சமூகவியல் ஆகிய பாடங்களையும் துணையாகத் தேர்ந்தெடுத்துக்  கொள்ளலாம். அமெரிக்காவின் டல்லாஸைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர் டி.ஏ.வெற்றிச்செல்வனின் தமிழ் மொழி, கலாசார அறிமுக  வீடியோவுடன் தமிழ்வகுப்புகள் தொடங்குகின்றன. “இந்தியா வளர்ந்து வரும் நாடு என்பதால் வேலைவாய்ப்புகளுக்கு பிரச்னையில்லை.  மாணவர்கள் தமிழ் குறித்த ஆய்வுகளில் ஈடுபடவேண்டும் என்பதே என் விருப்பம்...” என்கிறார் ஆசிரியை ஈஸ்வரி.

-ரோனி