பயணிக்கும் பெண்கள்!இந்தியாவில் வேலைசெய்யும் பெண்கள் தங்களின் பொருளாதார பலம் கூடியதால் தனியே சுற்றுலாத்தலங்களுக்கு பயணிக்கத்  தொடங்கியுள்ளனர். கடந்தாண்டுகளில் பெண் சுற்றுலாப் பயணிகளின் சதவிகிதம் 75 சதவிகிதமாக உயர்ந்துள்ளது மகிழ்ச்சிக்குரிய தகவல்.  தில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்களைச் சேர்ந்த பெண்கள் சுற்றுலா செல்லும் ஆர்வத்தில் டாப் இடங்களைப்  பிடித்துள்ளனர்.

‘‘கொல்கத்தா, புனே, கவுகாத்தி, ஜெய்ப்பூர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களிலிருந்தும் சுற்றுலா செல்லும் பெண்கள்  அதிகரித்துள்ளனர்...’’ என்கிறார் தனியார் சுற்றுலா முகவர் ஒருவர். பெண்கள் குழுவாக இணைந்து பயணம் சென்றாலும் பாதுகாப்பு  விஷயத்தில் கவனமாக உள்ளனர். வெளிநாடுகளில் லண்டன், சிங்கப்பூர், துபாய், மலேசியா ஆகிய நாடுகள் பெண்களைப் பெருமளவு  ஈர்த்துள்ளன. இந்த வகையில் இவ்வாண்டில் 22 சதவிகித பெண்கள் தனியே சுற்றுலா சென்று வந்துள்ளனர்.               

- ரோனி