லீகல் கஞ்சா!
உலகெங்கும் 125 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வந்தாலும் பெரும்பாலான நாடுகளில் அரசால் தடைசெய்யப்பட்டுள்ள பொருள் மரிஜுவானா. அண்மையில் ஜி7 நாடுகளில் முதல்நாடாக கஞ்சா மீதான தடையை நீக்கி மாற்றி யோசித்துள்ளது, கனடா. இன்னும் ஓராண்டுக்குள் கனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக விற்பனைக்கு வரும்.
‘‘செனட்டில் நாம் கொண்டு வந்துள்ள மசோதாவின் மூலம் கஞ்சா விற்பனையை சட்டவிரோத மனிதர்களின் கைகளிலிருந்து வெளிக்கொண்டு வந்துள்ளோம்...’’ என்று ஏகத்துக்கும் பெருமைப்பட்ட கனடா பிரதமர் ஜஸ்டின் மக்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதி இது. லீகல் செய்தால் கருப்பு மார்க்கெட்டிலிருந்து கஞ்சாவை வெளிக்கொண்டுவந்து அரசு கண்காணிக்க முடியும். கஞ்சா அடிமைத்தனம் என்பது 9% என்பதால் புகையிலை (32%), மது (15%), கோகைன் (16%) ஆகியவற்றை விட பாதிப்பு குறைவானதே. இத்தாலி மற்றும் இஸ்ரேல் கார்டல்களுக்குச் செல்லும் பேரளவிலான வருவாய் இனி கனடா அரசுக்கு மட்டுமே சொந்தம்.
ரோனி
|