அசத்தல்!
ரீடர்ஸ் வாய்ஸ்
‘காலா’ ரஜினியின் மனைவி தங்க செல செல்வி யாக அசத்திய ஈஸ்வரிராவ் பேட்டி அருமை. சென்னையின் தாராவிக்கு உழைத்த ராமலிங்கத்தின் உழைப்பு அசத்தல். - த.சத்தியநாராயணன், அயன்புரம்; நரசிம்மராஜ், மதுரை; நவீனாதாமு, பொன்னேரி; முத்துவேல்,கருப்பூர்; ஜானகிரங்கநாதன், சென்னை; மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி.
மனிதக்கழிவை அள்ளும் எந்திரனை கண்டறிந்த கேரள இளைஞர்களை நெஞ்சோடு அணைத்து பாராட்டலாம். - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; ஜானகி ரங்கநாதன், சென்னை; முருகேசன், கருப்பூர்; வளையாபதி, தோட்டக்குறிச்சி.
உடையா? பெயிண்டா? என மேஜிக்காய் கண்களை மயக்கியது இளங்கேஸ்வரியின் ட்ரைலான் பெயிண்ட் Body Art. - த.சத்தியநாராயணன், அயன்புரம்; ஜனனி கார்த்திகா, திருவண்ணாமலை; பூதலிங்கம், நாகர்கோவில்; கைவல்லியம், மானகிரி.
பாடத்திட்ட மாற்றம் பாராட்டுக்குரியது என்றாலும் முக்கிய அம்சங்களிலுள்ள குறைகள் திருஷ்டியாய் உறுத்துவதை அதிகாரிகள் கவனிக்கவில்லையா? - வி.ராஜ்குமார், குன்னூர்; அக்ஷயா மாறன், திருவண்ணாமலை; சித்ரா, திருவாரூர்; லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
அணு உலை பெருமைக்காக சொந்த நாட்டு மக்களின் மீது அரசு தொடுக்கும் போர் அவலம் மட்டுமல்ல; அநீதியும்கூட. - வி.ராஜ்குமார், குன்னூர்; அந்தோணி எடிசன், திருநெல்வேலி.
வைகைப்புயல் வடிவேலு காமெடி மழை பொழிய தடையாக உள்ள ஆளுமைக் கோளாறுகள் வேதனை தந்தன. - ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; சைமன்தேவா, விநாயகபுரம்; சந்திரமதி, சென்னை; சண்முகராஜ், திருவொற்றியூர்.
மாமல்லபுரம் குரு ஹோட்டலில் உயிர் மீன்களில் கரையும் சுவையில் வறுவல், ஆட்டுக்குடல் வறுவல் ரெசிபியும் டிப்ஸும் நாவின் சுவைமொட்டுகளை மலர்த்தின. - பிரேமாபாபு, மடிப்பாக்கம்; கைவல்லியம், மானகிரி; முத்துவேல், கருப்பூர்.
திருஷ்டி சுத்திப்போடும் கவர் ப்யூட்டி ஹன்சிகாவா? அம்சங்கள் கூடி பொலிவு அமர்க்களம். - சங்கீதசரவணன், மயிலாடுதுறை; மயிலைகோபி, திருவாரூர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு ரிப்பன் பில்டிங்கின் கட்டுமானச்செலவு ஏழரைலட்சம் என்பது வியப்பில் வாய்பிளக்க வைத்தது. - ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; மதுபாக்யா, திருநெல்வேலி; பூதலிங்கம், நாகர்கோவில்; சைமன்தேவா ,விநாயகபுரம்; முருகேசன், கங்களாஞ்சேரி.
தாராள மனசுடன் பொக்கிஷ நூல்களை அரசு நூலகத்திற்கு தருவேன் என்று கூறிய கோவிந்தராஜுவின் நூல்சேகரிப்பு அவரது தலைமுறை கர்வம் கொள்ளும் பெருமை. - ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; தேவா, கதிர்வேடு.
தங்கம், வம்சம் சீரியல் எழுத்தாளர் அசோக்குமாரின் பேட்டி, பவர்பன்ச் விறுவிறுப்பு. - முத்துவேல், கருப்பூர்.
|