சூப்பர் ஆட்சியர்!



கேரளாவின் ஆலப்புழாவிலுள்ள ஸ்தேவி விலாசம் மாணவர்களுக்கு மதிய உணவு இடைவேளையில் புதுமையான நண்பர் ஒருவர் கிடைத்தார். மதிய  உணவை மாணவ மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்டு ஆச்சரியப்படுத்தியது மாவட்ட கலெக்டர் சுகாஸ் ஐஏஎஸ்தான்!

மாவட்டத்திலேயே 1,600 மாணவர்கள் படிக்கும் பள்ளி ஸ்ரீதேவி விலாசம் என்பதால் உணவு சரியாக இருக்கிறதா என திடீர் ரெய்டு நடத்தினார்  ஆலப்புழா கலெக்டரான சுகாஸ். முன்பு வயநாட்டில் பணிபுரிந்தவர், அங்கு பள்ளி மாணவர்களின் இடை நிற்றலை பெருமளவு குறைத்து சாதனை  புரிந்தார்.

2012ம் ஆண்டின் ஐஏஎஸ் பேட்ச்சான சுகாஸ், கலிஃபோர்னியா, மேரிலாண்ட் பல்கலைக்கழகங்களில் படித்தவர். பழங்குடி மாணவர்களுக்கு  கல்வி உதவித்தொகை பெற்றுத்தந்து பள்ளிக்கல்வியை ஊக்குவித்த ஆளுமை. வயநாட்டில் வருகைப்பதிவு அதிகம் கொண்ட முப்பது மாணவர்களைத்  தேர்ந்தெடுத்து கொச்சி மெட்ரோவில் ஜாலி ரைடு செய்து அசத்தியது போன்ற உற்சாக ஐடியாக்கள் சுகாஸின் ஸ்பெஷல்.

ரோனி