தமிழில் உருவாகும் ஆசியாவின் முதல் விண்வெளிப் படம்!



- மை.பாரதிராஜா

இஸ்ரோ விண்வெளித்தளம் போல, பிரமாண்டமான ஸ்பேஸ் ஷிப் செட்டில் ‘டிக் டிக் டிக்’ இறுதிக்கட்ட ஷூட்டிங் பரபரக்கிறது. அந்தரத்தில் 360 டிகிரி சுழலக்கூடிய அதிநவீன ரோப் ஃபிட்டிங்கில் மிதந்து கொண்டிருந்த ஜெயம்ரவியை பெண்ட் நிமிர்த்திக் கொண்டிருந்தார் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன். ‘‘மாஸ்டர், ரோப் ரொம்ப இறுக்குது. ரெண்டே ரெண்டு நிமிஷம் ரிலாக்ஸ் பண்ணிக்கறேனே... ப்ளீஸ்...’’ ஜெயம்ரவி செல்லமாக சிணுங்க, ஃபைட் மாஸ்டர் மைக்கேல் தன் கன்ட்ரோலில் இருந்த கயிற்றின் இறுக்கத்தை தளர்த்துகிறார். அரை பனைமர உயரத்தில் தன் உடம்பை இரண்டாக மடித்தபடி அந்தரத்திலேயே ரிலாக்ஸ் பண்ணிக் கொண்டிருந்த ரவியிடம் ‘பிரேக்’ சொல்லிவிட்டு நம்மிடம் வந்தார் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன்.

‘‘என் படங்கள் ஒவ்வொண்ணும் இதுவரை தொடாத ஒரு விஷயத்தை தொடணும்னு விரும்புவேன். இப்ப தியேட்டருக்கு வர்றவங்க தெளிவா இருக்காங்க. ஃப்ரெஷ் எக்ஸ்பீரியன்ஸ் தேவைனு நினைக்கறாங்க. அப்படியொரு அனுபவத்தை என் படம் கொடுக்கணும். இந்த நிபந்தனையோடுதான் ஸ்கிரிப்ட் எழுதவே ஆரம்பிப்பேன்.‘நாணயம்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘மிருதன்’னு முன்னாடி நான் இயக்கின படங்கள் எல்லாமே வேற வேற ஜானர்ஸ். ‘மிருதனு’க்கு வரவேற்பு அதிகம் இருந்தது. ஒன்பது ஃபெஸ்டிவல்ஸ்ல ஸ்கிரீன் ஆகியிருக்கு. அந்த படத்தை எந்த விழாக்களுக்கும் நாங்க அனுப்பினதில்ல. அதான் இதில் விசேஷம். அதுக்குனு ஸ்பெஷல் டீம் அமெரிக்காவில் இன்னமும் இருக்கறது ஆச்சரியமாகவும் இருக்கு...’’ பிரமிப்புடன் பேசுகிறார் சக்தி.

விண்வெளி தொடர்பான சப்ஜெக்டுக்கு எப்படி ஸ்கிரிப்ட் எழுதினீங்க..?
எழுத்து வேலைக்கே கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாச்சு. இஸ்ரோ விஞ்ஞானி எங்க சந்தேகங்களை தீர்த்து வைச்சார். வழக்கமா ஸ்கிரிப்ட் எழுதறப்ப இன்டீரியர் / எக்ஸ்டீரியர்/ லொக்கேஷன் / பகல் / இரவு... இதெல்லாம் குறிப்பிட்டு எழுதுவோம். Spaceல இது எதுவும் வராது. Up / down / left look / right look எதுவும் இல்ல. ஒருத்தரோட ரெஃபரன்ஸ்லதான் இன்னொருத்தருடைய பார்வை இருக்கும். கேமராவையும் தலைகீழாக கட்டி ஷூட் பண்ண வேண்டியிருக்கும். ஒவ்வொரு நாளும் புது அனுபவம். படம் பார்க்கிறப்ப நீங்களும் ஃபீல் பண்ணுவீங்க!

‘டிக் டிக் டிக்’ ஜெயம் ரவி சாருக்கு மட்டுமில்ல, எங்க எல்லாருக்குமே ரொம்ப ஸ்பெஷல். ஆசியாவிலேயே முதல் ஸ்பேஸ் தொடர்பான படம்னு பெருமையா சொல்லிக்கலாம். அதேமாதிரி அதிக நாட்கள் ஜெயம் ரவி ரோப்புல தொங்கினது கூட இந்தப் படத்துலதான்.‘டிக் டிக் டிக்’ விண்வெளி சப்ஜெக்ட். சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம். ஒரு மாஸ் ஹீரோவை வச்சு, விஞ்ஞான ரீதியான கதையை வெகுஜன தளத்துல கொடுக்கறது சவான வேலை. ஆனாலும் குழந்தைகள் உட்பட மொத்த ஃபேமிலியும் ரசிக்கிற மாதிரி செய்திருக்கோம்.

அதென்ன ‘டிக் டிக் டிக்’..?
கமல் சாரோட ‘டிக் டிக் டிக்’ல அவர் ஒரு போட்டோ ஜர்னலிஸ்ட். அதனால ஸ்டில் கேமராவோட க்ளிக் சத்தத்தை டைட்டிலா வச்சிருந்தாங்க. இந்த ‘டிக் டிக் டிக்’ வேற. கடிகாரத்தில் இருந்து வரும் சத்தம். சீட்டு நுனியில உட்கார்ந்துட்டு கவனிக்கும் அளவுக்கு ஒரு த்ரில்லிங்கான ரேஸ் டைம் மொமன்ட் இருக்கும் இல்லையா.. அப்படி ஒரு பரபர நொடிகள் புது அனுபவமா இருக்கும்.‘மிருதன்’ டைம்லேயே இதோட ஒன்லைனை ஜெயம் ரவி சார்கிட்ட சொல்லிட்டேன். ரோப் ஹார்னஸ் போட்ட பிறகுதான் ரோப் போட்டுக்க முடியும்.

காலைல அவரை கயித்துல தொங்கவிட்டோம்னா... ஒரு ஸ்டூல் போட்டுக் கூட அவரால உட்கார முடியாது. அப்படி ஓர் அசுர உழைப்பு தேவை. அவர் ரோப்ல இருந்து கீழே இறங்கினால் மறுபடியும் அந்த பொசிஷன் செட் ஆக ரெண்டு மணி நேரம் டைம் ஆகும். அதனாலதான் அவரை ரோப்ல இருந்து இறக்காம அந்தரத்துலயே ரிலாக்ஸ் பண்ண வைச்சிருக்கோம். படத்துல விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குதான் தெரிஞ்ச முகங்கள் இருக்காங்க. நிவேதா பெத்துராஜ், ‘சூதுகவ்வும்’ ரமேஷ், அர்ஜுன் தவிர புது ஆட்கள் கொஞ்சபேர் இருக்காங்க.

ஹீரோயினும் ஸ்பேஸ் வீராங்கனையா?
நிவேதா பெத்துராஜ் இந்தப் படத்துல கமிட் ஆகுறதுக்கு முன்னாடி தமிழ்ல ஒரு படம்தான் பண்ணியிருந்தாங்க. இந்தக் கதைல ஹீரோயினுக்கும் ரோப் சீக்வென்ஸ் இருக்கறதால துணிச்சலான பெண்ணா தேடினோம். நிவேதா தாய்லாந்துல மார்ஷியல் ஆர்ட்ஸ் முடிச்சவங்க. இது தெரிஞ்சதும், ஃபிசிக்கலா அவங்க இந்த கேரக்டருக்கு ஃபிட் ஆவாங்கன்னு தோணுச்சு. உடனே கமிட் பண்ணினோம். அவங்களும் ரோப்ல நிறைய கஷ்டப்பட்டிருக்காங்க. அவங்க சொந்த ஊர் மதுரைங்கறதால தமிழ் நல்லா பேசுறாங்க. உச்சரிப்பும் பர்ஃபெக்ட். டயலாக்ஸை முதல்நாளே மனப்பாடம் பண்ணிட்டு வந்து பிச்சு உதறினாங்க.

ஹாலிவுட்ல space movies நிறைய வந்திருக்கு. இது எந்த வகைல ஸ்பெஷல்?
விஷுவல்ஸ் மிரட்டும். இந்த ஜெனரேஷன் வீடியோ கேம் குழந்தைகளுக்கு இது ஒரு பர்ஃபெக்ட் ஃபில்ம். வழக்கமா கிராஃபிக்ஸ் அதிகம் தேவைப்படக்கூடிய படங்களுக்கு வெளிநாட்டில் இருந்து சூப்பர்வைசரை வரவைப்பாங்க. அவர் மேற்பார்வைல ஒர்க் நடக்கும். ஆனா, இந்தப் படத்தோட தொழில்நுட்பம், கிராஃபிக்ஸ் எல்லாமே நம்ம ஆட்களோட கைவண்ணம். ‘மிருதன்’ல உள்ள டெக்னீஷியன்ஸ் அப்படியே இதிலும் ஒர்க் பண்ணியிருக்காங்க. ஜபக் சார் தயாரிச்சிருக்கார்.

இதுல ஆர்ட் டைரக்டர் எஸ்.எஸ்.மூர்த்தியோட ஒர்க் பெரியளவில் பேசப்படும். ஸ்பேஸ் தொடர்பா நாலு பிரமாண்ட செட்கள் அமைச்சிருக்கோம். ஒரிஜினல் ஸ்பேஸ் ஷட்டிலோட கலர்ஸ்ல இருந்து எல்லாத்தையும் நுணுக்கமா அப்படியே கொண்டு வந்திருக்கார். இமானோட மியூசிக் நல்லா வந்திருக்கு. மூணு பாடல்கள். எல்லாமே மான்டேஜ் ஸாங்ஸ். இதில் அப்பாவைப் பத்தி வரும் பாட்டு ஹிட் ஆகும். ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் கைகொடுத்ததால 50 நாட்கள்ல ஷூட்டிங் முடிஞ்சிருக்கு.

ஜெயம் ரவியோட பையன் ஆரவ் இந்தப் படத்துல அறிமுகமாகிறாராமே..?
ஆமா. பதினாறடி பாஞ்சிருக்கார். நிறைய குழந்தை நட்சத்திரங்களோடு ஒர்க் பண்ணியிருக்கேன். ரொம்பவே நம்ம பொறுமையை சோதிப்பாங்க. ஆனா, ஆரவ் அப்படியில்ல. ஸ்பாட்டுல ஒரு தடவை சொன்னா போதும், கப்புனு பிடிச்சுக்கறார். இத்தனைக்கும் ஆரவ்வுக்கு வயசு ஆறுதான். படத்துலயும் ரவி சாருக்கு பையனாகவே நடிச்சிருக்கார். இப்பவே புரொஃபஷனலா இருக்கார். டபுள் கால்ஷீட் தேவைப்படறப்ப தூங்காம தன் போர்ஷனை முடிச்சுக் கொடுத்தார். நிச்சயம் பெரிய ஆளா ஆரவ் வருவார்.