கூர்க்கா பெண் சிங்கம்!



பெண்கள் பல்துறையிலும் தம் ஆளுமையை நிரூபித்து சாதனை படைப்பது இந்நூற்றாண்டின் பெருமை. அதிலும் வழிகாட்டுதலின்றி தன் மன உறுதி மூலமே லட்சியத்தை அடைவது பெருமைதானே! சிக்கிம் அபராஜிதா ராய் அப்படி ஒருவர்தான். எட்டு வயதிலேயே வனத்துறை அலுவலரான தன் தந்தையை இழந்த அபராஜிதா ராய், ஆசிரியையான தாய் ரோமாவின் உதவியுடன் B.A LLB படித்தவர். பின் யுபிஎஸ்சி தேர்வை (2010) கனவுடன் எழுதினாலும் முதலில் கிடைத்தது தோல்விதான்.

விடாமுயற்சியோடு தேர்வெழுதி (2012) அசத்தலான மார்க்குடன் கூர்க்கா பெண்களில் மாநிலத்திலுயே முதல் ஐபிஎஸ் ஆபீசராக உருவாகி பெண்களுக்கு உதாரணமாக நிமிர்ந்து நிற்கிறார் அபராஜிதா ராய். விரைவில் மேற்கு வங்காளத்தின் ஹூக்ளியில் இவர் பணிபுரியவிருக்கிறார்.                              

- ரோனி