தட்டை விஞ்ஞானி!குழந்தை அடம்பிடித்தால் கமர்கட், குச்சிமிட்டாய் வாங்கிக்கொடுத்து சமாதானம் செய்யலாம். அதுவே உலகம் தட்டை என நிரூபித்தே தீருவேன் என அமெரிக்க விஞ்ஞானி அடம் பிடித்தால் என்ன செய்வது? கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மைக் ஹியூகெஸ், ஒரு விஞ்ஞானி. வேஸ்ட் இரும்பைக் கொண்டு நீராவியில் பறக்கும் ராக்கெட்டை தயாரித்துள்ளார்.

பிரச்னை இதல்ல. ‘20 ஆயிரம் டாலர்கள் செலவில் தயாரித்துள்ள இந்த ராக்கெட்டில் பறக்க பர்மிஷன் கொடுத்தால் உலகம் தட்டை என நிரூபிக்கிறேன்!’ என பேட்டி கொடுத்திருப்பதுதான் சர்ச்சை சரவெடி. ‘‘வானில் 1,800 அடிக்கு மேல் பறக்க அரசின் அனுமதி தேவை. நானும் மூன்று ஆண்டுகளாக  பர்மிஷன் கேட்கிறேன். அரசு மறுக்கிறது...’’ என கண்ணைக் கசக்குகிறார் மைக் ஹியூகெஸ்.                     

- ரோனி