குடத்துக்குள் நாய்!காவல்துறை மனிதர்களுக்கு மட்டுமல்ல, அகில உலக விலங்குகளுக்கும் ஃப்ரெண்ட்ஸ்தான் என்பதற்கு கர்நாடக மாநிலத்தில் நடந்த சம்பவமே சாட்சி. பெங்களூருவில் தண்ணீர் குடிக்க அலைந்த தெருநாய் ஒன்று எதார்த்தமாக குடத்திற்குள் நீர் இருக்குமே என தலையை விட்டு துழாவிப் பார்த்தது.

தண்ணீர் இல்லையென்றதும் ஓகே என தலையைத் திருப்பினால் ரிட்டர்ன் எடுக்கமுடியாமல் உள்ளேயே மாட்டிக்கொண்டது. இதனை ட்விட்டர் வழியே அறிந்த டிசிபி அபிஷேக் கோயல் உத்தரவுப்படி, 15 பேர் கொண்ட போலீஸ் டீம் துப்பாக்கி சகிதம் சென்று குடத்திற்குள் மாட்டிய நாயை உயிருடன் மீட்டுள்ளனர். 

- ரோனி