குங்குமம் டாக்கீஸ்



* மும்பையில் இசை நிகழ்ச்சி ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீனை பார்த்த ஸ்ருதி, அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்திருக்கிறார்.

* ‘‘சற்றே நான் குண்டாக இருப்பதால் சில பட வாய்ப்புகள் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால், கௌதம்மேனன் அதுபற்றி நினைக்காமல் எனக்கு வாய்ப்புக் கொடுத்தார்’’ என மனம்விட்டுப் பேசியிருக்கிறார் மஞ்சிமா மோகன்.

* ‘குரு’ படத்திற்காக இஸ்தான்புல் சென்று வந்த மணிரத்னம், நீண்ட வருட இடைவெளிக்குப் பின் ‘காற்று வெளியிடை’க்காக ஐரோப்பா பறந்து வந்திருக்கிறார்.

* ஐ.நா.பெண்கள் அமைப்பின் நல்லெண்ணத் தூதராக இருக்கும் ஐஸ்வர்யா தனுஷ், பெண்கள் முன்னேற்றம் மற்றும் ஐ.நாவின் திட்டப்பணிகள் குறித்து விரைவில் ஆவணப்படம் ஒன்றை இயக்குகிறார்.

* ‘‘இயக்குநராகவும் சாதிக்க வேண்டும். இது என் பல ஆண்டு கனவு. இப்போதுதான் அதற்கான நேரம் வந்திருக்கிறது’’ என இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார் பழைய நடிகரான கார்த்திக்.

* அடுத்த மாதத்தோடு ‘பாகுபலி 2’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது. அதனைத் தொடர்ந்து கிராஃபிக்ஸ், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் ஆரம்பிக்கின்றன.

* ‘‘மோடியோட அறிவிப்பு பொருளாதாரத்தை உயர்த்தும் என்பது நிச்சயம். ஆனா அதை செய்யுறதுக்கு முன்னாடி தகுந்த நடவடிக்கைகள் எடுத்திருந்தால் நல்லா இருந்திருக்கும்’’ என கருத்து தெரிவித்திருக்கிறார் விஜய்.

* ‘டியர் ஜிந்தகி’ படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் அலியாபட், இந்த குழந்தைகள் தினத்தன்று, ‘‘ஸ்கூல்ல படிக்கும் போது நான் வகுப்பில் தூங்கினேன். அதுக்காக நான் அந்த வாரம் முழுவதும் வகுப்பை சுத்தப்படுத்த வேண்டும் என தண்டனை கொடுத்துவிட்டார்கள்’’ என ஃப்ளாஷ்பேக்கை மனம் திறந்திருக்கிறார்.

* ரஜினியின் ‘2.0’ பட ஃபர்ஸ்ட் லுக்கை மும்பையில் இம்மாதக் கடைசியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியை யூ டியூப்பில் லைவ்வாக ஒளிபரப்பவும் உள்ளனர்.

* ‘‘நான் நடிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து, ஒரு ஸ்டார், சூப்பர் ஸ்டாராக ஆனதை சிவகார்த்தியிடம் தான் பார்க்குறேன். இதையெல்லாம் தாண்டி சிவா ரொம்ப எளிமையானவர், நட்பானவர், இனிமையானவர்’’ என விழா ஒன்றில் சிவாவைப் புகழ்ந்திருக்கிறார் சமந்தா.

* ‘தோனி’ பட ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புத் இப்போது தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். தரமான குறும்படங்கள், சின்ன பட்ஜெட் படங்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

* ‘‘என் கேரக்டர் வலுவாக இருப்பதால் தொடர்ச்சியாக இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட்டில் நடிக்கறேன். நடிப்பதை நான் தொழிலாக நினைக்கவில்லை. படிப்பை முடித்துவிட்டு எதிர்காலத்தை தீர்மானிப்பேன்’’ என்கிறார் ஆனந்தி.

* ‘மிருதன்’ பட இயக்குநரின் அடுத்த படமான ‘டிக் டிக் டிக்’கிலும் ஜெயம் ரவிதான் ஹீரோ என்பது தெரிந்ததே. விண்வெளியை மையமாக வைத்து த்ரில்லராக ரெடியாகிவரும் இதில் ஜெயம்ரவியின் மகன் ஆரவ்வும் நடிக்கிறார்.