கமென்ட் கோயிந்து



சக்திவேல் மருதமுத்து

பெரம்பலூர் மாவட்டத்தில 5 நாட்களாக ஏடிஎம்கள் மூடல்: செய்தி
அது தொறந்து இருந்தாலும் முக்கால்வாசி நாளு வேலை செய்யாம தானே இருக்கு. பேசாம மூடியே வச்சுடுங்க செக்யூரிட்டி. சம்பளமாவது
மிச்சமாகும்.

ஐநூறு, ஆயிரம் ரூபாய் பணத்தை விட்டு நகைகளை மட்டும் கொள்ளையடித்த கொள்ளையர்கள்: செய்தி
திருடறதுல கூட இவ்வளவு அப்டேட்டா இருக்கிங்களேடா..

கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: செய்தி
கள்ள நோட்டு அடிக்கவே சோம்பல் பட்டுக்கிட்டு கலர் ஜெராக்ஸ் போட்ருக்கானுக. இவனுகளை வச்சிட்டு நாட்டை எப்புடி வல்லரசு
ஆக்குறது..

புதிய ரூபாய் நோட்டுகளை ராகுல் காந்தி வரிசையில் நின்று பெற்றுக் கொண்டார்: செய்தி
பாவம், அவருக்கே கை செலவுக்கு காசில்லாத நிலமையிலதான் கட்சி ஓடுது போல

கறுப்புப் பணம் எங்கிருந்தாலும் மோடி சேட்டிலைட் வழியாக பார்ப்பார் - எஸ்.வி சேகர்
அய்யய்யோ! நான் வேற எப்பவுமே பணத்தை பட்டா பட்டி டவுசர்ல தானேய்யா வைப்பேன்..

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றார்: செய்தி
நம்ம கோபாலண்ணே ஹிலாரி தான் அடுத்த பிரதமர்னு வாழ்த்து சொன்னப்பவே நெனைச்சேன்..

ஓவியங்கள்: கண்ணா