மஞ்சிமாவிடம் சறுக்கி விழுந்த மனசு!



ஸ்வீட் அண்ட் சால்ட் ஓபன் பேட்டியில் கௌதம் ஆசம். சிம்புவைத் தாண்டி மஞ்சிமாவின் கொழுக் மொழுக் ஹனி தேகத்தில் சறுக்கி விழுகிறதே எங்கள் மனசு!
-க.மா.சாரங்கன், மதுரை.

அரசு இலவசம் என்றாலும் மத்திய அரசின் உதவியின்றி ரேஷன் கடைகள் எப்படி சாத்தியம்? மக்களின் ஐயத்தை அரசுதான் தீர்க்கவேண்டும்.
-யூ.ஜானகிராமன், சென்னை-4

தங்கத்திற்கு ஆல்டர்நேட்டிவான ‘லூமினக்ஸ் யூனோ’ செய்தி ஆறுதல் தந்தாலும், பளபள ஷைனிங்கும், குறைந்த விலையும் பயம் தருகிறதே!
- இரா. முருகானந்தம், திருப்பூர்.

பால்ய குருக்களையும் அவர்களின் பாடங்களையும் மறக்காத நலன் குமரசாமியின் ‘டவுன்லோடு மனசு’ தேன்நெல்லி இனிப்பு.
-ஆர்.ராஜாராமன், திருநெல்வேலி.

வழிபாட்டுத்தலங்களை வணிகக் கடைகளாக்கும்  மனிதர்களைக் குறித்த ‘முகங்களின் தேசம்’ தொடர் பாரம்பரியத்தைக் காட்டும் கண்ணாடி.
-ஜா.கந்தசாமி, கோவை.

அம்பை எடுத்து நாணில் ஏற்றும் மைக்ரோ செகண்ட் வேகத்தில் முதல் வாரமே நெஞ்சில் திகில் தோட்டாவைச் செலுத்துகிறது  ‘விஜயனின் வில்’ தொடர்.
-அ.நவநீதகிருஷ்ணன், தூத்துக்குடி.

வாந்தி உடல் நலம் காக்கும் என சர்ப்ரைஸ் செய்தி தந்த ‘செகண்ட் ஒப்பீனியன்’ தொடர் நலம் வாழ எந்நாளும் வாசிக்கலாம்.
-ஜி.மணிகண்டன், புதுச்சேரி.

நுகர்வைக் குறைத்து வனத்தை அழிக்காமல் வாழ்வு காக்கும் ‘உயிரமுது’ முதல் மழைத்துளி சிலிர்ப்பு.
-ரா.ரசிகாமுத்து, கிருஷ்ணகிரி.

வயது முதிர்ந்த குழந்தைகளை ஏற்றுக்கொள்வது எப்படி என்று கூறிய ‘உறவெனும் திரைக்கதை’ எளிய சொல்லால் மனம் கவர்கிறது.
-ஒய்.அங்கிதா ஷிவேஷ், சென்னை-78

கமல் சினிமாக்காரர் என்றாலும் அவருக்கான பிரைவசியை மதிப்பது அவசியம் எனக் கூறியது காமன்சென்ஸ் அட்வைஸ்.
-எஸ். ஜீவன்குமார், விழுப்புரம்.

ஒரு நாளில் 44 கேஸ்களில் வாதாடியவரா வி.எல்.எதிராஜ்? என அளவில்லாத வியப்பு தந்தது ‘தமிழ்நாட்டு நீதிமான்கள்’ தொடர். 
-இ.ரங்கநாதன், திருவண்ணாமலை.

யுகபாரதியின் எழுத்து ஊஞ்சலில் ஆட தேநீரோடு ஆவல் கனிய காத்திருக்கிறோம்.
-கா.மனுஷ்பாரதி, திண்டுக்கல்.