வலைப்பேச்சு



@vrsaran
நாட்டுல மக்கள் எல்லாம் மகிழ்ச்சியா இருக்கீங்க போல... ஒரே நூறு நாள் திட்டமாகக் கண்ணுல படுதே!

@SettuOfficial
பொண்டாட்டி கூட வாக்குவாதம் பண்ணி நாம ஜெயிச்சிட்டா இரண்டு நாளைக்கு அவங்க என்ன சமைச்சாலும் எந்த கமெண்ட்டும் சொல்லாம சாப்புட்றணும்!

@Evanno_oruvan
பஸ்ல இடம் கிடைக்கணும்னா, ஒண்ணு குழந்தையோட போகணும், இல்லைனா குழந்தையாவே போகணும்.

@Tparavai
ஸ்கூல்ல சொல்லிக்கொடுத்த எல்லா ரைம்ஸும் அழகா ரைமிங்காச் சொல்லிடுறா வெண்ணிலா. ஆனா எல்லாத்தையும் காலகேய மொழில சொல்லிடுறதால ஒண்ணும் வெளங்கலை.

3 மாணவர்கள் சரியாகப் படிக்காத காரணத்தால் பரீட்சைக்கு வராமல் கட்அடித்துவிட்டு படத்துக்குச் சென்றனர். படம் முடிந்ததும் தங்களின் ஆடையில் சேற்றைப்பூசிக் கொண்டு தலைமையாசிரியரிடம் சென்றனர். “சார், காலையில் ஒரு கல்யாணத்துக்குப் போயிட்டு பரீட்சைக்கு வந்திரலாம்னு நெனைச்சோம்.. வர்ற வழியில பைக் பஞ்சராகி மூணுபேரும் சேத்துல விழுந்துட்டோம்.எங்களுக்கு இன்னொரு சான்ஸ் கொடுங்க சார்’’ என்றனர்.

ஆசிரியரும் புரிந்துகொண்டு மூன்று நாள் அவகாசம் கொடுத்தார். மூன்று நாள் கழிச்சு மூன்று பேரும் நல்லா படிச்சிட்டு வந்தாங்க. மூணு பேரையும் தனித்தனி ரூம்ல உட்கார வச்சார். கேள்வித்தாள்ல மொத்தமே 4 கேள்விகள் தான் இருந்திச்சு.

1. யாருக்கு கல்யாணம்? (25 மார்க்)
2. கல்யாணம் எங்க நடந்துச்சு? (25 மார்க்)
3. மாப்ள என்ன கலர் டிரஸ் போட்டிருந்தார்? (25 மார்க்)
4.எந்த பைக்ல போனீங்க? (25 மார்க்)

கண்டிஷன்: பதிலெல்லாம் ஒரே மாதிரி இருக்கணும்.!
      
யாருகிட்ட... நீங்க படிக்கிற பள்ளியில் நான் ஹெட்மாஸ்டர்டா!

பல் டாக்டரைப் பார்க்கப் போனேன். அங்க லேடி டாக்டர் இருந்தாங்க..
அதான் திரும்பி வந்துட்டேன். ஏன்னா… பேசிக்கா நாம எந்தப் பொண்ணு கிட்டயும் பல்லக் காட்டி நிக்க மாட்டோம்ல
புருஷோத் விஜய்

சிங்கிள் பாய்ஸ் மைண்ட் வாய்ஸ்:  நான் சிங்கிளும் அல்ல, கமிட்டடும் அல்ல. இரண்டுக்கும் நடுவில் ஏதோ ஒன்று.
தீபக் கிருஷ்ணா

ஜவுளிக் கடைக்குப் போய் காஸ்ட்லியாடிரஸ் கூட வாங்கிடலாம். ஆனா ஓசில கட்டைப்பைதான்
வாங்க முடியல!

மஞ்சஜா

மனைவியின் அற்புதமான சமையலுக்கு கிடைத்த கோப்பை கணவனின் தொப்பையாம்!
அமுதா முருகேசன்

@CreativeTwitz
“கடன்” வாங்கும்பொழுது சிரிப்பை பேரம் பேசி அங்கே அடகு வைக்கப்படுகிறது.

பல் டாக்டர்: ஏம்ப்பா, எப்படி உன்னோட ஒரு பல் உடைஞ்சுது?
பேஷன்ட்: என் மனைவி பண்ணின கடலை மிட்டாய் கல்லு மாதிரி இருந்தது...
பல் டாக்டர்: அப்போ வேண்டாம்னு சொல்லி இருக்க வேண்டியதுதானே?
பேஷன்ட்: அத சொல்லப் போய்தான் பல்லு உடைஞ்சுது டாக்டர்...!!!

கணவன் : இன்னிக்கு உருளைக் கிழங்கு பொரியல்ல உப்பு கொஞ்சம் ஜாஸ்திம்மா.
மனைவி : உப்பு சரியாதாங்க இருக்கு!
உருளைக்கிழங்குதாங்க கொஞ்சமா இருக்கு!
(Wife is always Right.. :)

@HAJAMYDEENNKS
பக்கவாதம் உடலுறுப்பை செயலிழக்கச் செய்யும்.
வாக்குவாதம் நட்பை செயலிழக்கச் செய்யும்...!

@Kozhiyaar
ஐஃபோன் 7-வாட்டர், டஸ்ட் ரெஸிஸ்டன்டாம்!!
ஏன்யா ஆயிரம் ரூபா ஃபோனுக்கே ஆயிரம் கவர் போடுறவங்க நாங்க!
ஐஃபோன்லாம் வெளிய எடுத்து பேசவே மாட்டோம்!

@vandavaalam
வாழ்க்கையில பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமே, நம்ம உடம்புக்கு நாமே டாக்டராவும், நம்ம மனசுக்கு நாமே வக்கீலாவும் இருப்பதாலதான்.

@iamparattai
மனைவி: எங்க சொந்தக்காரங்க வர்றாங்க, எங்காவது கூட்டிட்டுபோலாமா?
கணவன்:  ம்... Zooவுக்கு கூட்டிப்போலாம்.
மனைவி: உங்க சொந்தமெல்லாம் அவங்களுக்கு பிடிக்காது.

சில மனிதர்கள் அப்படியே நீல வானில் படர்ந்த மேகம் போன்றவர்கள்…
கொய்யால! போன உடனே ஏரியா ப்ரைட் ஆகிடும்.
அருந்ததி கனகரத்னம்

என்னுடன் நீண்ட தூரம் நேரம் பாராமல் பேசிக்கொண்டே நடக்கும் பெண்தான் வாழ்க்கைத் துணையாக வேண்டும்..
ஏன்னா என் கிட்ட கார் இல்லப்பா… ஹி ஹி.
அஸ்வின் ஆர் குரு

கூட யாருமே இல்ல, தனியா
இருக்கோம்னு வருத்தமா இருக்கா?
லைட்ட ஆஃப் பண்ணிட்டு
நல்ல பேய் படமா பாருங்க.
பின்னாடி யாரோ இருக்க மாதிரியே
ஃபீல் ஆவும்.....!
முகமது அப்துல்லா

உங்கள் கணவரை நேசியுங்கள்!
அடிக்கடி டீயோ, காபியோ
கேக்குறார் என்றால்
உங்கள் நிறுத்தாத பேச்சை
புத்துணர்ச்சியுடன் கேட்க
விரும்புகிறார் என்று
அர்த்தம்.

மற்ற அழகான பெண்களைப்பார்க்கிறாரா?
என் பொண்டாட்டிய விட அவ
என்ன அழகான்னு செக்
பண்றார்னு அர்த்தம்.

உங்கள் சமையலை குறை
கூறிக்கொண்டே இருக்கிறாரா?
அவரது சுவையறியும் திறன்
கூடிக்கொண்டே போகிறது
என்று அர்த்தம்.

இரவில் குறட்டை விட்டு
உங்கள் தூக்கத்தை
கெடுக்குறாரா?
உங்களை மணந்தபின்தான்
நிம்மதியாக உறங்குகிறார்
என்று அர்த்தம்.

உங்கள் பிறந்தநாளுக்கு பரிசு
வாங்கித் தரவில்லையா?
உங்கள் எதிர்காலத்துக்கு
பணம் சேமித்துவைக்கிறார்
என்று அர்த்தம்.

நேசித்தே ஆகவேண்டும்;
உங்களுக்கு வேற வழியும்
இல்லை.
ஏனென்றால்.........
கணவனை அடிப்பது
சட்டப்படி குற்றம்

‏@g4gunaa
“வெறும் எம்பிபிஎஸ் தானா?” என என்றைக்கு மருத்துவர்களை ஏளனமாகப் பார்க்க ஆரம்பித்தோமோ, அன்றிலிருந்துதான் மருத்துவமனைகள் கார்ப்பரேட்களாயின.

@ikrthik
குழந்தைகளிடம் பிடித்ததே அவர்கள் கவனமீர்க்க, காரியம் சாதிக்க, அழுகையை மட்டுமே பயன்படுத்தி சிரிப்பைத் தூய்மையாக வைத்திருக்கிறார்கள்.

@sugu_writes
ஒருவரைப்பற்றி தவறான அபிப்பிராயங்களை இன்னொருவரின் மனதில் விதைப்பவனே இவ்வுலகில் மிகவும் கீழ்த்தரமான சுபாவமுள்ளவன் ஆவான்.

‏‏@Maga_raja
நம்மை முந்திச் செல்பவர்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.
ஏதாவது ஒரு சிக்னல்ல சிவப்புவிளக்கு எரிந்துகொண்டுதான் இருக்கும்
#வாழ்க்கை...

@Itz_Disha
இன்னைக்கு எனக்கு happy birthday day என்பதிலிருந்து வெறும் birth day என சொல்லிக் கொள்ளத் துவங்கியதில் தொலைந்திருந்தது குழந்தைமை.

@Kannan_Twitz
இந்த சந்துல பைக் போவுமா போகாதானு யோசிக்கிற நேரத்துல ஆட்டோ காரன் சும்மா சர்ர்ருனு சைடு போட்டு போவான் பாருங்க, அதான் வாழ்க்கை.
#டிசைன்

‏@meenammakayal
தமிழ் சினிமா ஹீரோயின் கேரக்டர் எல்லாமே ஆஃப்பாயில்தான் என்பதால்தான் இந்த டப்மாஷ் பெண்களுக்கு சுலபமாக பெர்ஃபார்ம் செய்ய வருகிறது...

@kumarfaculty
வாகனங்களைப் போட்டியாக நினைப்பதற்குப் பதில் மனிதர்களைப் போட்டியாக நினைத்தால் லட்சியமாவது உயிருடன் இருக்கும்.

@kumarfaculty
வாகனங்களைப் போட்டியாக நினைப்பதற்குப் பதில் மனிதர்களைப் போட்டியாக நினைத்தால் லட்சியமாவது உயிருடன் இருக்கும்.

ரோட்டுல வழுக்கி விழுந்தா யாரும் பார்க்கும் முன்னே எழணும்..
வாழ்க்கைல கீழ விழுந்தா எல்லாரும் பார்க்கற மாதிரி எழணும்..
கவியரசன் திருஞானம்

பணக்காரக் குழந்தையா இருந்தாலும் வீடு வரையச்சொன்னா குடிசை வீடோ அல்லது ஓட்டு வீடோதான் வரையிது.
பிரதி

நைட்ல தூக்கம் வரமாட்டேங்குது; காலைல முழிப்பு வரமாட்டேங்குது. இதுதான்
ஜென் நிலையா?
ரவி பிரகாஷ்

என்னோட திறமையையும்...உழைப்பையும் பார்த்து மதிக்காத உலகம் ஒற்றைக் காகிதத்தில் என்னோட எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்றால்....
அதைவிட முட்டாள்தனம் இவ்வுலகில் இல்லை...
ஒண்ணுமில்ல, செமஸ்டர் எக்ஸாம் எழுதப் போறேன்.
பாலமுருகன்

@ThalayMagan
ICU வில் கிடைக்கும் ஆக்சிஜன் சிலிண்டருக்கு இருக்கும் மதிப்பு ஏனோ இயற்கையாக ஆக்சிஜனை வழங்கும் மரங்களுக்கு தரப்படுவதில்லை.

@mekalapugazh
இழந்தவைகளை எண்ணிக்கொண்டே பெற்றவைகளைக் கொண்டாட மறந்து..பின் ஒருநாளில் பெற்றவற்றை இழந்து அதை எண்ணி வருந்தவும் செய்வோம்.

@naiyandi
காரணமே இல்லாமல் கோபம் வருகிறதா? சந்தேகமே வேண்டாம்,உங்களுக்கு வயசாயிடுச்சுன்னு அர்த்தம்!

நம்ம மதுரைக்காரப்பையன் ஒருத்தன் ரயில்ல போயிட்ருந்தானாம், அப்போ செம ஃபிகர் ஒண்ணு அவனுக்கு முன்னாடி இருந்த சீட்ல வந்து ஒக்காந்தாளாம். நம்மாளுக்கு செம குஷியாயிடுச்சாம்... அந்த கேபின்ல அவங்க ரெண்டு பேரைத் தவிர வேற யாரும் இல்லன்றதால லைட்டா நம்மாளு அந்தப் பொண்ண நோட்டம் உட்டானாம்.

அந்தப் பொண்ணும் மெதுவா அப்பப்போ இவன பாக்க, இளையராஜா பேக்ரவுண்டு வாசிக்க, அப்டியே வானத்துல பறக்கற ஃபீல்ல இருந்தானாம்... கொஞ்ச நேரம் கழிச்சு அந்தப் பொண்ணு இவன் இருந்த சீட் பக்கம் வந்து உக்கார, நம்மாளுக்கு சும்மா ஜிவ்வுனு ஏறிட்ருக்கும்போதே, அந்தப் பொண்ணு இவன்ட்ட, ‘‘ஒழுங்கு மரியாதையா உங்கிட்ட இருக்கிற வாட்ச், மோதரம், செயினு, பர்ஸ் எல்லாத்தையும் எடுத்து குடுத்துடு.

இல்லேனா நீ என்னை பலவந்தமா பலாத்காரம் பண்ண ட்ரை பண்றேனு கத்தி சத்தம்போட்டு எல்லாரையும் கூப்டுருவேன்’’னு சொல்லிச்சாம்... அதுக்கு நம்ம மதுரைக்காரன், பாக்கெட்டி லிருந்து ஒரு பேப்பர எடுத்து, ‘எனக்கு காது கேக்காது, வாய் பேச வராது... நீங்க என்ன சொல்றீங்கனே எனக்கு புரியல. நீங்க சொன்னத இதுல எழுதிக் காட்டுங்க’னு எழுதிக் காட்டினானாம்... அந்தப் பொண்ணும் பேப்பர வாங்கி அதே மாதிரி எழுதிக் காட்டினாளாம்... அத வாங்கி பாக்கெட்ல வச்ச பின்னாடி நம்மாளு மெதுவா சொன்னானாம், ‘‘இப்போ கத்துடி பாக்கலாம்...!’’