கமென்ட் கோயிந்து
சக்திவேல் மருதமுத்து
புகார் கொடுக்க வந்த பெண்ணின் கணவனை திருமணம் முடித்த பெண் போலீஸ்: செய்தி இதை விட பெரிய தண்டனைய அந்தாளுக்கு எந்த கோர்ட்டுலயும் குடுக்க முடியாது
கால தாமதமாக வந்து சேர்ந்தது பருவமழை: செய்தி என்ன இருந்தாலும், ரமணன் ஒரு ஆளுக்கு தான்யா புயலும், மழையும் கட்டுப்பட்டது
ஜியோ நெட்வொர்க் பிரச்சனையை சரிசெய்ய 45 ஆயிரம் டவர்கள் அமைக்கப்படும்: செய்தி என்னடா திடீர்னு பெட்ரோல் விலை ஏறுதேன்னு பாத்தேன். இதானா சங்கதி!
மவுலிவாக்கம் கட்டிடம் இடிப்பதற்கு ஆகிய செலவு 50 லட்சம்: தமிழக அரசு அந்த நாலு தூணையும் கட்டுறதுக்கே இம்புட்டு செலவு ஆகிருக்காது போலருக்கே ஆபீஸர்
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலைய மேற்கூரை விழுந்தது: செய்தி இது என்னவோ நம்மளை தலைக்கவசம் போட வைக்குறதுக்காக நம்ம அரசாங்கம் பண்ணுன இராசதந்திரமா இருக்குமோன்னு டவுட்டா இருக்கு
பேரவை நடந்த 36 நாட்களுக்கு ஜெனரேட்டர் வாடகை 5.24லட்சம்: செய்தி ஒரு “மின் மிகை” மாநிலத்தோட சட்டப்பேரவையே ஜெனரேட்டர் கரண்டுலதான் நடந்துருக்குங்குறத நெனைச்சாதான்...
ஓவியங்கள்: கண்ணா
|