குங்குமம் டாக்கீஸ்



* ‘‘டெல்லியின் மாசு சூழலைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தால் ஆச்சரியமாகவும், கேலிக்குரிய ஒன்றாகவும் இருக்கிறது’’ என ஃபீலாகியிருக்கிறார் சோனாக்‌ஷி சின்ஹா.

* ‘‘ஹீரோயின் கதாபாத்திரம் கிடைக்கவில்லை என்றால் என் இமேஜுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிப்பேனே தவிர சினிமாவை விட்டு போக மாட்டேன். என் கடைசி மூச்சு வரை நடித்துக் கொண்டே இருப்பேன்.’’ என சமீபத்தில் மனம் திறந்திருக்கிறார் த்ரிஷா.

* ‘அனிமல்ஸை தத்து எடுங்க.. விலை கொடுத்து வாங்காதீங்க’னு ‘பீட்டா’வுக்காக பூனைக்குட்டியை கையில் ஏந்தி சொன்ன எமி ஜாக்சன் இப்போது, ‘சிக்கன் சாப்பிடாதீங்க. வெஜிடேரியனுக்கு மாறுங்க’ என சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.

* ஜிம்மில் வெயிட் தூக்குவதில் ஆர்வம் காட்டுகிறார் சமந்தா. சமீபத்தில் 72 கிலோ வெயிட்டை தூக்கி அசால்ட்டாக எக்ஸர்சைஸ் செய்வதை இன்ஸ்டாவில் வீடியோவாகவும் தட்டிவிட்டிருக்கிறார் சமந்தா.

* இந்தியில் இரண்டு படங்கள் கைவசம் வைத்திருக்கும் டாப்ஸி, மும்பையில் தனது தங்கை ஷாகனுடன் இந்த தீபாவளியை கொண்டாடியிருக்கிறார்.

* பிரபு சாலமன், இயக்குநர் ஆவதற்கு முன்பு ‘டூப்’ நடிகராக இருந்திருக்கிறார். அவர் சரத்குமாருக்கு பல படங்களில் இரட்டை வேடங்களில் நடிக்கும்போது உடன் நடித்திருக்கிறார். அதற்குப் பின்தான் இயக்குநராகப் பயிற்சி.

* ‘‘சினிமாவில் எனக்கு கேப் விழுந்துவிட்டதாக சிலர் சொல்கிறார்கள். சத்தியமாகச் சொல்கிறேன். எனக்கு கேப்பும் கிடையாது. ஆப்பும் கிடையாது. நான் எப்பவுமே டாப்பு தான்’’ என சமீபத்தில் இசைவெளியீட்டு விழா ஒன்றில் மனம் திறந்துள்ளார் வடிவேலு.

* அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா என ரம்மியமான இயற்கை இடங்களுக்கு குடும்பத்தினருடன் சுற்றுப்பயணம் செய்துவருகிறார் அமீர்கான். மனைவி கிரணின் பிறந்த நாளை மேகாலயாவில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் அமீர்.

* ‘‘ஹாரர் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். நடுராத்திரியில் கூட பேய்ப்படங்களை தைரியமாக பார்ப்பேன். நான் மலையாளத்தில் நடிச்ச ‘கீதாஞ்சலி’ கூட பேய்க்கதைதான்’’ என தைரியமாக சொல்கிறார் கீர்த்தி சுரேஷ்.

* ‘மூன்று முகம்’ படத்தை ரீமேக் செய்வதில் நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். அதற்காக தனி டிஸ்கஷன் வைத்து சீரமைக்கிறார்.