கமென்ட் கோயிந்து



ஒலிம்பிக்கில் பதக்கம் கிடைக்க விஜய் மல்லையா அட்வைஸ் - செய்தி
இவரு சொல்ற அறிவுரையைக் கேட்டா, எதுல பதக்கம் வாங்குறமோ இல்லையோ... ஓட்டப்பந்தயத்துல கண்டிப்பா தங்கமே
வாங்கிருவோம்!

இவரு சொல்ற அறிவுரையைக் கேட்டா, எதுல பதக்கம் வாங்குறமோ இல்லையோ... ஓட்டப்பந்தயத்துல கண்டிப்பா தங்கமே வாங்கிருவோம்!
நல்லவேளை, காசு வாங்கிட்டு ஓட்டு போட்டாங்கன்னு குத்திக் காட்டல!

நடிகை சன்னி லியோனிடம் ஒட்டிக் கொண்டு பெற்றோரிடம் செல்ல மறுத்த குழந்தை: செய்தி
கடைசியில அந்தக் குழந்தையா இருந்திருந்தாகூட பிறவிப் பலனை அடைஞ்சிருக்கலாம்!

ஒடிசாவில் இறந்து போன பழங்குடிப் பெண்ணிற்கு ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் 12 கி.மீ தோளில் தூக்கிச் சென்ற கணவன்: செய்தி
நெருங்கிட்டோம்... இதே ரூட்டுல இன்னும் நாலு கிலோமீட்டர் போனா நாடு வல்லரசு ஆகிரும்!

சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்க தமிழக அரசு முடிவு: செய்தி
காதல் கவிதை எழுதுறதையும், காலை வணக்கம் போடுறதையும் பாத்து என்னய்யா பண்ணப் போறீங்க? மொதல்ல நாட்டுல நடக்குறத பாருங்க ஆபீசர்ஸ்!

ஜார்கண்டில் ஒரு கிராமத்தில் பேய் இருப்பதாகக் கூறி ஊரையே காலி செய்த மக்கள்: செய்தி
நாங்கல்லாம் பேய்கூடதான் குடும்பமே நடத்துறோம், இதைப் போயி பெருசா பேசிக்கிட்டு...