ஸ்பீக்கரு...
கூட்டணி பேச வந்தவங்க ஏன் கண்ணீர் விட்டு அழறாங்க தலைவரே..?’’ ‘‘2016ல் என் நிலைமையை நினைச்சு சீட் கொடுங்கன்னு சொன்னேன்..!’’
‘‘தலைவர் புதுசா விருப்பமில்லா மனு வாங்கறாரே... எதுக்கு?’’ ‘‘யார் யாருக்கு தேர்தல்ல நிற்க விருப்பமில்லைன்னு லிஸ்ட் எடுக்கறார்!’’
தலைவரை ஏன் கட்சிய விட்டு நீக்கினாங்க..?’’ ‘‘உபயோகப்படுத்தாம வீட்டுல நிறைய ஸ்டிக்கர் வச்சிருந்தாராம்..!’’
‘‘கூட்டணி அமைந்து விட்ட சந்தோஷத்தில் இருக்கும் எங்கள் தலைவருக்கு தேர்தல் கமிஷன் கை விலங்கு சின்னம் ஒதுக்கியிருப்பது தொண்டர்களின் மனதை வெகுவாக பாதிக்கிறது என்பதை...’’
தலைவருக்கு ஒரு தொகுதி கூட தரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க...’’ ‘‘கூட்டணிக் கட்சிகளா..?’’ ‘‘ம்ஹும்! கட்சில உள்ள கோஷ்டிகள்தான்...’’
தலைவர் தன்னோட செல் நம்பரை ஊர் பூரா எழுதிப் போட்டிருக்காரே... ஏன்?’’ ‘‘மக்கள் ஒரு ஓட்டுக்கு எவ்வளவு எதிர்பாக்கறாங்கன்னு கருத்து கணிப்பு நடத்தறார்!’’
விருப்ப மனு கொடுத்தவரை தலைவர் ஏன் கட்சிய விட்டு நீக்கிட்டார்..?’’ ‘‘தலைவர் தேர்தல்ல நிற்கக் கூடாதுன்னு விருப்பத்தை தெரிவிச்சிருக்கார்!’’
|