ஸ்பீக்கரு...
நேர்காணல்ல நம்ம தலைவர் மானத்தை வாங்கிட்டார்...’’ ‘‘அப்படி என்ன செஞ்சார்?’’ ‘‘டெபாசிட் இழப்பீட்டை ஈடுகட்டும் இன்சூரன்ஸ் பாலிசி நம்ம கட்சியில இருக்கான்னு கேட்டுத் தொலைச்சுட்டார்!’’ - நா.கி.பிரசாத், கோவை.
தலைவர் இந்த எலெக்ஷன்ல எப்படியாவது ஜெயிக்கணும்னு பார்க்கறாரு...’’ ‘‘அதுக்கு..?’’ ‘‘ஆமா! தொகுதில எல்லாருக்கும் ஒரு ஏ.டி.எம் மெஷின் தர்றேன்னு வாக்குறுதி கொடுக்கறாரே...’’ - வி.சாரதி டேச்சு, சென்னை-5.
‘‘நம்ம தலைவர் ஏன் மேடையில படிக்கட்டு பக்கமா உட்கார்ந்திருக்கார்..?’’ ‘‘கூட்டணியிலேர்ந்து எந்த நேரம் வேணும்னாலும் விலகுற ஐடியா இருக்காம்..!’’ - அ.ரியாஸ், சேலம்.
‘‘ஆனாலும் நம்ம தலைவர் சரியான அல்பம்...’’ ‘‘ஏன்..?’’ ‘‘கூட்டணி பற்றி பேச மற்ற கட்சித் தலைவர்களுக்கு மிஸ்டு கால் விடுறாரே..!’’ - அ.ரியாஸ், சேலம்.
‘‘கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு முறை அமைச்சராகவும், மூன்று முறை முன்னாள் அமைச்சராகவும் இருந்த தலைவர் அவர்களே...’’ - கே.ஆனந்தன், தர்மபுரி.
‘‘அதிகமான முதலமைச்சர் வேட்பாளர்களைக் கொண்ட ஒரே கட்சி எங்களுடையதுதான் என்பதை...’’ - பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
கூட்டணி முடிவை தலைவர்தான் எடுப்பார்னு சொன்னது தப்பா போச்சு...’’ ‘‘ஏன்... என்னாச்சு?’’ ‘‘கூட்டணியில இருந்து தலைவரையே எடுத்துட்டாங்க!’’ - எஸ்.கோபாலன், சென்னை-70.
|