போஸ் உண்டு... ரேஸ் இல்லை!
கிருஷ்ணருக்கு ஒரு அர்ச்சுனன் போல கேப்டன் தோனிக்கு விராட் கோஹ்லி. அது அப்படியே இருந்தால்தான் வெற்றி. கேப்டன் யார் என ஈகோ மோதல் எழுந்தால் குழப்பம்தான் மிஞ்சும்! - த.சத்தியநாராயணன், சென்னை-38.
 அட்டையில் டாப்ஸி... ‘நம்பர் 1 ரேஸ் வேண்டாம்’ என்று அவர் சொன்னால் என்ன? அந்த போஸ், அரேபியக் குதிரையை நினைவுபடுத்திவிடு கிறதே!- ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை.
அ.தி.மு.க அரசு விவசாயிகளுக்கு எதுவுமே செய்யவில்லை என்றதை வன்மையாகக் கண்டிக்கிறோம். விவசாயிகளுக்கு மட்டுமல்ல... யாருக்குமே எதுவுமே செய்யாத ஆட்சி இது. வெறும் காட்சிதான் நடக்கிறது! - எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
‘அரசியலால் தமிழகம் இழந்த மின்சாரம்’ கட்டுரையைப் படித்ததும் ஷாக் அடித்தது! கடவுளே, தமிழ்நாட்டைக் காப்பாத்துப்பா! - கே.டி.முத்துவேல், கருப்பூர்.
விதவைப் பெண்கள் ஒன்றிணைந்து தங்களுக்கென வாழ்வுரிமைச் சங்கம் துவங்கியிருப்பது அருமை. அவர்களின் குடியைக் கெடுத்த குடியைப் பற்றி அரசு சிந்திப்பது எந்நாளோ! - என்.சண்முகம், திருவண்ணாமலை.
மகனே இறந்த பிறகு தேசிய விருதால் என்ன பயன்? - மறைந்த எடிட்டர் கிஷோரின் அப்பா சொன்ன இந்த வார்த்தைகள் கல் நெஞ்சையும் கலங்க வைத்திருக்கும்! - ஓ.எஸ்.மூர்த்தி, ஆணையம்பேட்டை.
மழையை மறக்கலாம்... ஆனால், மழை விடுமுறைகளுக்குக் காரணமான ரமணன் அங்கிளை மறக்க முடியுமா? ஓய்வுக்காலத்தில் அவர் வாழ்வில் நிம்மதி மழை பொழியட்டும்! - லட்சுமிபுத்திரன், சென்னை-78.
ஹொய்சாள பாணி மண்டபத் தூண்கள், யாழ், தளிர், பனித்துளி, கரிய சுடர்கள் என்றெல்லாம் ஜெயமோகன் விவரித்தது எக்சலன்ட்! - கே.எஸ்.குமார், விழுப்புரம்.
மனோபாலா கவிஞரோ, புகழ்பெற்ற எழுத்தாளரோ அல்ல. ஆனால் அவரது எழுத்து வாசகர்களை ஈர்க்கக் காரணம், அதில் இருக்கும் உண்மை. - கே.ஆர்.சிதம்பரக் குமாரசாமி, சென்னை-83.
குதிரைக்கு பெருமுயற்சி செய்து கோட்டும் சூட்டும் தைத்த ஆடை வடிவமைப்பாளர் எம்மாவின் திறமையை நினைத்தால்... யம்மா! - இராம.கண்ணன், திருநெல்வேலி.
|