ஜோக்ஸ்



தங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கும் தொண்டர்கள்னு ஃப்ளெக்ஸ் வச்சதுக்கு தலைவர் ஏன் டென்ஷன் ஆகறாரு..?’’
‘‘ஜெயிலுக்குள்ள வச்சிருந்தாங்களாம்!’’
- சி.சாமிநாதன், கோயமுத்தூர்.

தத்துவம் மச்சி தத்துவம்

சொத்துப் பங்கீடு முடிஞ்சதும் சொத்துக்களை வங்கியிலே அடமானம் வைக்கலாம். தொகுதிப் பங்கீடு முடிஞ்சதும் தொகுதியை அடமானம் வைக்க முடியுமா?- அடமானம் வைத்தே அவமானம் அடைவோர் சங்கம்
- தாமு, தஞ்சாவூர்.

யோவ், இன்னைக்கா தேர்தல்... இது தெரியாம நாம கோட்டை விட்டுட்டோமே?’’
‘‘ஐயோ தலைவரே... அது ரேஷன் கடை க்யூ!’’
- எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

தலைவரை மிரட்டித்தான் கூட்டணியிலே சேர்த்தாங்களா... எப்படி?’’
‘‘சேர்ந்தா ‘கேஷ்’ வரும்... சேரலைன்னா ‘கேஸ்’ வரும்னாங்க..!’’
- தாமு, தஞ்சாவூர்.

எப்பவும் பிரச்னைகளுக்குக் குரல் கொடுப்பேன்...’’‘‘நடுராத்திரியில இப்படி போதையில நீங்க இப்ப குரல் கொடுப்பதுதான் பிரச்னையே... பேசாம தூங்குங்க தலைவரே!’’
- நா.கி.பிரசாத், கோவை.

ஸ்பீககரு...

‘‘அடுத்தபடியாக நமது கட்சியின் முதலமைச்சர் கனவு வேட்
பாளர் அவர்கள் பேசுவார்கள் என்பதை...’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

இந்த ஆஸ்பத்திரியில இதுக்கு மட்டும் ஏன் ‘எலெக்‌ஷன் வார்டு’ன்னு பேர் வச்சிருக்கீங்க சிஸ்டர்?’’
‘‘இங்க ‘தேர்தல் ஜுரம்’ வந்த அரசியல்வாதிங்க அட்மிட் ஆகியிருக்காங்க... அதனாலதான்!’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.