ஜோக்ஸ்



‘‘இது நமக்குப் பொருத்தமில்லாத கூட்டணின்னு எப்படி தலைவரே சொல்றீங்க..?’’
‘‘தண்ணியடிக்கும்போது யாரும் சியர்ஸ் சொல்லலையே!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘எதிர்க்கட்சிகள் உங்கள் மீது சுமத்துகிற ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு நீங்க என்ன பதில் சொல்றீங்க?’’
‘‘அவர்களுக்கு வாய்ப்பு வருகிற வரை இதையெல்லாம் பொறுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்!’’
- சரவணன், கொளக்குடி.

‘‘நம்ம சாதனையைச் சொல்லி ஓட்டு கேளுங்கய்யா...’’
‘‘ஸ்டிக்கர் ஒட்டினதைச் சொன்னா உதைக்க வர்றாங்களே தலைவரே..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

பிரபலமா இருக்கணும்... தைரியமா இருக்கணும்... விமர்சனத்துக்கு அஞ்சக்கூடாது... எப்ப வருவார்னு எல்லாரும் எதிர்பார்க்கணும்... சபையிலே சரக்கோட இருக்கணும்... அந்த மாதிரி ஆளைத்தான் வேட்பாளரா நிறுத்தணும்!’’
‘‘அப்ப விஜய் மல்லையாவுக்குத்தான் சீட்டு தருவீங்களா..?’’
- தாமு, தஞ்சாவூர்.

தலைவர் தான் நடிகர்ங்கிறதை நிரூபிச்சிட்டாரா... எப்படி?’’
‘‘தொகுதி பங்கீட்டுலே `ஏ சென்டர்’ எல்லாம் உங்களுக்கு... `பி சென்டர்’, `C சென்டர்’ எல்லாம் எனக்குங்கிறாரு...’’
- தாமு, தஞ்சாவூர்.

ஸ்பீக்கரு...

‘‘2016ம்ஆண்டில் தேர்தலில் மக்கள் தீர்ப்புக்காகவும், கோர்ட்டில் ஜட்ஜ் தீர்ப்புக்காகவும் காத்திருக்கும் தலைவர் அவர்களே...’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘கூட்டணிக் கதவை தலைவர் இன்னும் சிறிது நேரத்தில் மூட இருப்பதால், சிறிய கட்சிகள் கடைசி வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்...’’
- பா.ஜெயக்குமார், வந்தவாசி.