சகல வளங்களும் அருளும் சப்த மாதர்கள்



அபூர்வ ஸ்லோகம்

1. பிராம்ஹி த்யானம்:

தண்டம் கமண்டலும் கச்சாத் அக்ஷஸூத்ரமதாபயம்
பிப்ரதி கனகச்யா ப்ராம்ஹீ க்ருஷ்ணாஜினோஜ்வலா

மந்த்ரம்:

    ஓம் ப்ராம் ப்ராஹ்ம்யை நம:
    ஓம் ஆம் க்ஷாம் ப்ராம்ஹீ கன்யகாயை நமஹ

பிராம்ஹி காயத்ரி:

ஓம் ப்ரஹ்மசக்த்யை வித்மஹே பீதவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹீ ப்ரசோதயாத்

பூரண த்யானம்:
அக்ஷஸ்ரக் சுப குண்டி கேச தததீம்
ஹஸ்தைர் வரம் சாபயம்
தேவீ ஸௌம்ய முகோத்பவாம் ஸ்மிதமுகீம்
ஹம்ஸே ஸ்திதாம் வாஹனே
ப்ரம்ஹாணீம் ஜகதாம் சுபம் விதததீம்
ஆத்யாமஹம் மாதரம்
வந்தே ஸ்வர்ணஸமான காந்திருதிராம்
சக்திம் ப்ராம் ப்ரம்ஹணீ:
தேவி மஹாத்மியத்தில் ப்ராஹ்மி:
ஹம்ஸயுக்த விமானஸ்தே பிரஹ்மாணீ ரூபதாரிணி
கௌரிசாம்ப க்ஷரிகே தேவி நாராயணி நமோஸ்துதே.

பிராம்ஹி வடிவம் எடுத்து ஹம்ஸம் பூட்டிய விமானத்தில் வீற்றிருந்து தர்ப்பைப் புல்லால் நீரைத் தெளிக்கும் தேவி நாராயணியே! உனக்கு  நமஸ்காரம். அம்பிகையின் ஒரு அம்சம் பிரம்மசக்தி. சிருஷ்டி ஆற்றல் பெற்றது. ப்ராம்ஹணீ என்பதற்கு பரமசிவனின் பத்தினி என்றும் பெயர்.  தோலிற்குத் தலைவியானவள் இத்தேவி. சொறி, சிரங்கு நோய் ஏற்பட்டவர்கள் இத்தேவியை வெட்டிவேர் விசிறியால் விசிறி, விபூதி அணிந்து, புட்டும்,  சர்க்கரைப் பாகும் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு அளித்தால் அன்னை நோயை தீர்ப்பாள். தேவரும், முனிவரும், மனிதரும் வழிபடும் திருவடித்  தாமரையினாலும் பிரம்மனின் சக்தியான ப்ராம்ஹி எப்போதும் தம்மைக் காக்கட்டும்.

2. மாஹேஸ்வரி த்யானம்:

சூலம் பரச்வதம் க்ஷூத்ர தந்துபிம் ந்ருகரோடிகாம்
வஹிந்தீ ஹிம சங்காசா த்யேயா மஹேச்வரி சுபா

மந்த்ரம்:

ஓம் மாம் மாஹேஸ்வர்யை நமஹ
ஓம் ஈளாம் மாஹேஸ்வரி கன்யகாயை நமஹ
மாஹேஸ்வரி காயத்ரி:
ஓம் ஸ்வேதவர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மாஹேஸ்வரி ப்ரசோதயாத்.

தேவி மாஹாத்மியத்தில் மாஹேஸ்வரி:

த்ரிசூல சந்த்ரோ மஹாவ்ருக்ஷப வாஹினி
மகேஸ்வரி ஸ்வரூபேண நாராயணீ நமோஸ்துதே

மகேஸ்வரி வடிவம் கொண்டு, திரிசூலமும், பிறை மதியும், அரவமும் தரித்து, ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் நாராயணீ உனக்கு நமஸ்காரம்.  பரமசிவனுடைய பத்தினி மாகேஸ்வரி. மஹேஸ்வரன் த்ரிகுணாதீதமானதும் நிர்குணமானதுமான வடிவமுடையவர். அப்பேர்ப்பட்டவரின் ஈஸ்வரியும்  அவரைப் போலவேதான் இருப்பாள். மஹதீ என்றால் அளவிடமுடியாத பெரும் சரீரத்தையுடையவள் என்று அர்த்தம். இத்தேவி சர்வ  மங்களங்களையும் அருள்பவள்.

இவள் வாகனமான எருது, தர்மத்தின் உருவம். உழைப்பிற்குப் பெயர் பெற்றது. நம் உடலில் கொழுப்புக்குத் தலைவியானவள் இத்தேவி. வெட்டுக்காயம்  ஏற்பட்டவர்கள், இத்தேவியை குறுவேர் விசிறியினால் விசிறி, குங்குமார்ச்சனை செய்து, சுண்டலும், நீர்மோரும் ஏழைகளுக்கு விநியோகம் செய்தால்  வெட்டுக்காயங்கள் ஆறும். இத்தேவதையை மனமாற வழிபடும் யாவரும் மங்களங்கள் பெருகி இன்பமாய் வாழ்வர்.

3 கௌமாரி த்யானம்:

அங்குசம் தண்ட கட்வாங்கௌ பாசாம்ச தததீகரை:
பந்தூக புஷ்ப ஸங்காசா கௌமாரீ காமதாயினீ பந்தூக வர்ணாம் கிரிஜாம்சிவாயா மயூர வாஹாம்து குஹஸ்ய சக்திம்
ஸம் பிப்ரதீம் அங்குச சண்ட தண்டௌ
கட்வாங்கரா சொள சரணம் ப்ரபத்யே!

மந்த்ரம்:

ஓம் கௌம் கௌமார்யை நமஹ
ஓம் ஊம் ஹாம் கௌமாரீ கன்யகாயை நமஹ
கௌமாரி காயத்ரி:
ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி
தன்னோ கௌமாரி ப்ரசோதயாத்
தேவி மஹாத்மியத்தில் கௌமாரி:
மயூர குக்குட வ்ருதே மஹா சக்தி தரேனகே
கௌமாரீ ரூப ஸம்ஸ்தானே நாராயணீ நமோஸ்துதே

மயில் வாகனம் மீது கோழிக்கொடி சூழ, மகா சக்தி ஆயுதத்தைத் தாங்கி பாபமற்ற கௌமாரியாக விளங்குகின்ற நாராயணி உனக்கு நமஸ்காரம்.  தேவர்களின் சேனாதிபதியாக விளங்கும் முருகப்பெருமானின் வீரத்திற்குக் காரணமே கௌமாரிதான். மன்மதனைப் பழிக்கும் பேரழகோடும்  சௌந்தர்யத்தோடும் தோற்றமளிப்பதால் சுப்ரமண்யர் குமாரர் என வணங்கப்படுகிறார். அஹங்காரத்திற்கு தேவதையாக இவர் சொல்லப்படுகிறார்.  வராஹ புராண ஸ்லோகப்படி சிவன் புருஷனென்றும், உமாதேவி ஞானம் என்றும் இவ்விருவரின் சேர்க்கையால் உண்டான அஹங்காரமானது  சேனாதிபதியான குஹன் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அஹங்காரத்தினுடைய கணங்களை நாதர்களாகக் கொண்டவர்களை அம்பிகை அடக்கிக் கொண்டிருப்பதால்தான் அவளை ‘குமார கண நாதாம்பா’  என்றழைத்து வழிபடுகிறோம். வீரத்தை இவளே அருள வேண்டும். இவள் வாகனமான மயில் ஓங்கார வடிவத்தோடு விளங்குகிறது. ரத்தத்திற்குத்  தலைவி இவள். பசுக்களுக்கு தோன்றும் கோமாரி எனும் நோய் நீங்க இத்தேவியை  பனை ஓலை விசிறியால் விசிறி எலுமிச்சம் பழ சாதம்  நிவேதனம் செய்ய அவை நலம் பெறும்.

4 வைஷ்ணவி:த்யானம்:

சக்ரம் கண்டாம் கபாலம்ச சங்கம்ச தத்திகண:
தமால ச்யாமளா த்யேயோ வைஷ்ணவீ விப்ரமோஜ்வகை

மந்த்ரம்:

ஓம் வைம் வைஷ்ணவ்யை நம:
ஓம் ரூம் ஸாம் வைஷ்ணவீ கன்யகாயை நம:

வைஷ்ணவி காயத்ரி:

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்
தேவி மஹாத்மியத்தில் வைஷ்ணவி:
சங்க சக்ர கதா சார்ங்க க்ருஹீத பரமாயுதே
ப்ரஸீத வைஷ்ணவீ ரூபே நாராயணீ நமோஸ்துதே

வைஷ்ணவீ ரூபிணியாக சங்கு, சக்ரம், கதை, சார்ங்கம் என்ற வில் இவற்றை ஆயுதங்களாகக் கொண்ட நாராயணீ உனக்கு நமஸ்காரம்.  லக்ஷ்மி  வடிவாக இருப்பவள் என்று அர்த்தம். விஷ்ணுவின் சக்தியாய் பொலிபவள். சீழுக்கு அதிதேவதையானவள் இவள். விஷக்கடிகள் நீங்க இத்தேவியை  தென்னை ஓலையால் விசிறி, ப்ரார்த்தனை செய்து, பட்டினி இருந்து, பன்னீர் தெளித்து, பாயசம் நிவேதனம் செய்து பாலகர்களுக்கு அளித்தால்  நிவாரணம் பெறலாம்.

5. வாராஹி: த்யானம்:

முஸலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கரைர்சதுர்பிர் வாராஹி த்யேயாகா லகனச்சவி:

மந்த்ரம்:

ஓம் வாம் வாராஹ்யை நமஹ.
ஓம் ல்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நமஹ.

வாராஹி காயத்ரி:

ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
ஓம் மஹிஷத்வஜாய வித்மஹே தண்ட ஹஸ்தாய தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

ஒப்பற்ற யக்ஞ வராஹ மூர்த்தியான விஷ்ணுவின் உருவத்துடன் வராஹ சரீரத்துடனும், உலக்கை, கத்தி, வலக்கீழ்க்கரங்களிலும், கேடயம், சங்கு  போன்றவற்றை இடக்கீழ்க்கரங்களிலும் தாங்கிய வாராஹியைத் துதிப்போமாக என்கிறது தேவி மஹாத்மியம். எலும்பிற்கு அதிதேவதை இவள். எலும்பு  நோய் கண்டவர்கள் இத்தேவியை விசிறியால் விசிறி, வெள்ளரிக்காய், முறுக்கு நிவேதித்து தானமளிக்க நோய் நீங்கும்.

6  இந்த்ராணீ (ஐந்த்ரீ):த்யானம்:

அங்குசம் தோமரம் வித்யுத் குலசம் பிப்ரதீகரை
இந்திர நீல நிபேந்த்ராணி த்யேயா ஸர்வஸம் ருத்திதர

மந்த்ரம்:

ஓம் ஈம் இந்த்ராண்யை நமஹ
ஓம் ஐம் சாம் இந்த்ராணி கன்யகாயை நமஹ்

ஐந்த்ரீ காயத்ரி:

ஓம் ச்யாமவர்ணாயை வித்மஹே வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்த்ரீ ப்ரசோதயாத்

பூரண த்யானம்:

அம்பாயா ஸ்தன மண்டலாத் ஸ்முதிதாம்
சுவேதே த்வீபே ஸுஸ்திதாம்
ஹஸ்தை: அங்குச தோமரே சதத்தீம்
பாசாம்ச வஜ்ராயுதம்
மாஹேந்த்ரோபல தேஹகாந்தி ருசிராம்
மாஹேந்த்ர சக்திம் பராம்
இந்த்ராணீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம்
ஸதபாதரு ஸௌபாக்யதாம்

தேவி மஹாத்மியத்தில் ஐந்த்ரீ:
 கிரீடினி மஹா வஜ்ரே ஸஹஸ்ரநயனே ஜ்வலே
வ்ருத்ர ப்ராணஹரே சைந்த்ரீ நாராயணீ நமோஸ்துதே

கிரீடம் தரித்து பெரிய வஜ்ராயுதம் தாங்கி, ஆயிரம் கண்களுடன் ஜொலிக்கும் இந்திரனின் மகாசக்தியே, விருத்தாசுரனின் பிராணனைப் போக்கியவளே.  உன்னை நமஸ்கரிக்கிறேன். சதையின் அதி தேவதை இவள். அம்மை நோய் ஏற்பட்டவர்கள் இத்தேவியை. வேப்பிலையால் விசிறி, சந்தனம் பூசி  பலாச்சுளை நிவேதித்து தானம் அளித்தால் நலம் உண்டாகும்.

7  சாமுண்டி: த்யானம்:

 சூலம் க்ருபாணம் ந்ருசிர: கபாலம் தததீகரை
முண்ட ஸ்ரங் மண்டிதாத்யேயே சாமுண்டா ரக்த விக்ரஹா
சூலம் சாதததீம் கபால ந்ருசிர: கட்கான்ஸ்வ ஹஸ்தாம்புஜை
நிர்மாம் ஸாபிமனோஹரா க்ருதிதரா ப்ரேதே நிஷண்னா சுபா!
ரக்தாபா கல சண்ட முண்ட தமணீ தேவி லலாபோத்பவா
சாமுண்டா விஜயம் ததாது நமதாம் பீதிப்ராணாசோத்யதா

மந்த்ரம்:

ஓம் சாம் சாமுண்டாயை நம:
ஓம் ஔம் வாம் சாமுண்டா கன்யகாயை நம:

காயத்ரி:

ஓம் க்ருஷ்ண வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ:  சாமுண்டா ப்ரசோதயாத்
தேவி மஹாத்மியத்தில் சாமுண்டா:
தம்ஷ்ட்ரா கரால வதனே சிரோமாலா விபூஷணே
சாமுண்டே முண்ட மதனே நாராயணீ நமோஸ்துதே

தெற்றிப்பல் திருவாயும், முண்டமாலையை அணிந்தவளும், முண்டனைக் கொன்றவளுமான நாராயணீ உனக்கு நமஸ்காரம். இவள் மிகுந்த கோபம்  கொண்டவள். சண்டா என்று சங்கு புஷ்பத்திற்குப் பெயர். அந்த புஷ்பத்தில் பிரியமுள்ளவள். நரம்பின் தலைவி இவள். ஊர் கலகம் உண்டாகும் போது  காளியின் கதையைக் கேட்டும், கவரிமான் விசிறியால் அன்னைக்கு விசிறியும், தயிர் அபிஷேகம் செய்தும் அவல், சேமியா ஆகியவற்றாலான  திண்பண்டத்தை நிவேதனம் செய்து எளியோர்க்கு அளித்துத் துதித்தால் கலகம் நீங்கும். இவளை வணங்குவோர் வாழ்வில் எத்தகைய துன்பமும்  எளிதில் தீரும்.

- ந.பரணிகுமார்